ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா ?

By Sakthi Raj Apr 16, 2024 11:59 AM GMT
Report

திருமணம் என்ற பொழுது பெண் பார்த்து கண்டிப்பாக ஜாதகம் பார்ப்போம்.அப்படியாக ஜாதகம் பார்க்கும் பொழுது பல விஷயங்கள் சொல்லுவார்கள்.

அதில் பல சந்தேகங்களும் நமக்கு வரும்.அப்படியாக அதில் முக்கியமாக சொல்ல கூடியது ஒரே ராசி நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்யலாமா கூடாதா என்பது தான்.

ஆனால் உண்மையில் ஒரே ராசிக்காரர்கள் ஈர்ப்பு அதிகம் இருக்கும்,இப்படியாக அவர்களுக்கு பிடித்து இருந்தும் ஜாதகம் தடுக்கும்.அதனால் எழும்பும் சந்தேகம் பற்றி பார்ப்போம்.

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா ? | Rasi Natchathiram Thirumanm Parigaram

பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, சில நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்றும் சில நட்சத்திரங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றும் 'காலபிரகாசிகா' என்ற ஜோதிட நூல் விளக்குகிறது.

இணைக்கக் கூடாத ஒரே நட்சத்திரங்கள்: பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக வந்தால், திருமணம் செய்யக்கூடாது. சிறிதுகூட பொருத்தம் இல்லை.

இந்த நட்சத்திரக்காரர்களை இணையக்கக்கூடாது ரோகிணி, திருவாதிரை,மகம், அஸ்தம், விசாகம்,திருவோணம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன், மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம்.இவை நல்ல பலன்களை கொடுக்கும்.

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா ? | Rasi Natchathiram Thirumanm Parigaram

தசா சந்திப்பு தோஷம் உண்டாகாது. மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்: அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். ஆனால், மத்திமமான பொருத்தம்தான். மொத்தத்தில் திருமணம் செய்யலாம், பாதகம் இல்லை.

ராம நவமியன்று நடக்கப் போகும் அதிசயம்

ராம நவமியன்று நடக்கப் போகும் அதிசயம்


பொருத்தமுள்ள ஒரே நட்சத்திரத்தை, சேர்ந்த மணமகள் மணமகன்களுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரத்தின் முந்தைய பாதம் ஆணுக்கும் அடுத்த பாதம் பெண்ணுக்கும் இருந்தால், திருமணம் செய்யலாம்.

உதாரணமாக, ரோகிணி நட்சத்திரம் என்றால், நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஆகியவற்றில் ஏதாவதொரு பாதம் பெண்ணுக்கு இருப்பது நற்பலன்கள் கொடுக்கும்.

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா ? | Rasi Natchathiram Thirumanm Parigaram

பெண் நட்சத்திரப் பாதம் முதலிலும் ஆண் நட்சத்திரப் பாதம் பிந்தியதாகவும் இருந்தால், திருமணம் செய்வது சிறப்பான பலன் இல்லை.

உதாரணமாக, திருவாதிரை நட்சத்திரம் என்றால், திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் பெண்ணுக்கும் இரண்டு மூன்று நான்கு பாதங்களில் ஏதாவதொரு பாதம் ஆணுக்கும் இருப்பது நற்பலன்களைக் கொடுக்காது.

பொதுவாக, இருவரும் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் சரி, ஒரே ராசியாக இருந்தாலும் சரி, மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. காரணம் என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஆயுளில் பாதகம் ஏற்படாது. பரஸ்பரம் அன்பு அதிகமாகவே இருக்கும்.

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா ? | Rasi Natchathiram Thirumanm Parigaram

ஆனால், மற்ற மற்ற சௌகரியங்கள் குறையுடன் இருப்பதைக் காணலாம். ஒரே ராசியாகவோ ஒரே நட்சத்திரமாகவோ உள்ள தம்பதிக்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி வரும்போது இருவருக்கும் ஒன்றாகவே துன்பம் தரும்.

இதே போல குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பங்களையே தருவார் 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US