ரதசப்தமி முதல் ஆரம்பமாகும் சூரியனின் ஆட்டம்.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
2026 ஆம் ஆண்டு ரத சப்தமியிலிருந்து சூரிய பகவானின் வேகம் இன்னும் அதிகமாக செயல்படும். இவை பிப்ரவரி 13ஆம் தேதி வரை தொடர்கின்ற நிலை உள்ளது. அந்த வகையில் ரத சப்தமி நாளில் நாம் சூரிய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் நிச்சயம் சூரிய பகவானுடைய அருளால் நம் வாழ்க்கையில் நல்ல புகழும் செல்வ செழிப்பும் உண்டாகும்.
அந்த வகையில் நடக்கின்ற ரதசப்தமி நிகழ்வால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு அலுவலகத்தில் இவர்களுடைய தலைமைத்துவ பண்பு அதிக அளவில் ஓங்கி நிற்கும். நீண்ட நாட்களாக இவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்ற காரியத்தை எந்த ஒரு தடை தடங்களும் இல்லாமல் இந்த காலகட்டங்களில் செய்து முடித்துவிடுவார்கள்.
தந்தையின் வழியே இவர்களுக்கு நல்ல ஆதரவும் அனுகூலமும் கிடைக்கும். உறவுகள் இடையே இருந்த விரிசல் விலகி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் வேலை ரீதியாக பொன்னான வாய்ப்புகள் இவர்களை தேடி வரப்போகிறது. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் உயரப் போகிறார்கள்.
பல திசைகளில் இருந்து இவர்களுக்கு பண வரவு கிடைக்கப் போகிறது. சொத்து தகராறுகளிலிருந்து இவர்கள் விடுபடக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் எழக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இந்த காலகட்டமானது அவர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த மன கசப்புகளை நீக்கி ஒரு நல்ல சூழலை கொடுக்கப் போகிறது. குடும்பத்தினர் இவர்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
சமுதாயத்தில் இவர்களுக்கான மதிப்பும் அங்கீகாரமும் உயரப்போகிறது. நீண்ட நாட்களாக பொன் பொருள் வாங்க வேண்டும் என்ற ஆலோசனைகள் இருந்தால் நிச்சயம் அவை இந்த காலகட்டங்களில் நிறைவேறும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த காலகட்டமானது இவர்களுக்கு குடும்பத்தில் ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்க போகிறது. கணவன் வழி உறவுகள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு துணையாக வந்து நிற்கப் போகிறார்கள்.
நீங்கள் வேண்டாம் என்று ஒதுங்கி சென்றவர்கள் கூட மீண்டும் உங்களிடம் வந்து இணைந்து பேசக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அவர்கள் நினைத்தது போல் அமையப்போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |