ராகு தோஷம் இருப்பவர்கள் இந்த 3 பரிகாரம் செய்தால் வாழ்க்கையே மாறுமாம்
நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நடக்கக்கூடிய பிரச்சனை நம்முடைய ஜாதக ரீதியாக தொடர்பு கொண்டதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு சிலர் வாழ்க்கையில் தடை, தாமதம், அவமானங்கள் எதையும் முழுமையாக செய்ய முடியாமல் இருத்தல் போன்றவை எல்லாம் அந்த நபருக்கு ராகு தோஷம் இருப்பதை குறிக்கிறது.
இவர்களுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் மனக்குழப்பம் இருந்தேகொண்டே இருக்கும். காரணம், இவர்களுடைய மனம் மற்றும் எண்ணம் செயல் எல்லாம் மிகவும் பிரம்மாண்டமாகவே யோசிக்கும். ஆதலால் உண்மை தன்மையை இவர்கள் பார்ப்பதற்கு மறந்து விடுவார்கள்.
அதனால் பல நேரங்களில் இவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகளும் குழப்பங்களும் வருகிறது. அப்படியாக இந்த ராகு தோஷம் இருப்பவர்கள் குறிப்பிட்ட சில பரிகாரங்கள் செய்தால் நிச்சயம் அவர்கள் அந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். அதைப்பற்றி பார்ப்போம்.
1.ராகு தோஷம் இருப்பவர்கள் ஒரு தேங்காயை எடுத்து அதை கருப்பு அல்லது நீல நிறத் துணியில் சுற்றிக்கொண்டு ஒரு செவ்வாய்க்கிழமை அன்று அந்த தேங்காயை ஓடும் நீரில் ஹனுமனுடைய மந்திரங்களை பாராயணம் செய்து அந்த தேங்காயை தண்ணீரில் விடும் பொழுது அவர்களுடைய தோஷமும் அந்த தேங்காயுடன் சேர்ந்து தண்ணீரில் கரைந்து விடுகிறது.
2. ராகு தோஷம் இருப்பவர்கள் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவு அளிப்பது என்பது ஒரு நல்ல பலனை கொடுக்கும். அதிலும் குறிப்பாக கருப்பு நிற நாய்களுக்கு அவர்கள் உணவு வழங்கும் பொழுது அவர்களுக்குரிய தோஷத்தை அது குறைக்கிறது. இவர்கள் கருப்பு நிற நாய்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்று உணவு வழங்கும் பொழுது மன அமைதி கிடைக்கிறது.
3. தெய்வங்களில் ஹனுமன் நம்முடைய தடைகளை உடைக்கக் கூடியவராக இருக்கிறார். மனவலிமையை அதிகரித்து வாழ்க்கையில் எதையும் போராடி ஜெயிக்க கூடிய தன்மையை அவர் வழங்குகிறார். ஆதலால் ஹனுமனுடைய மந்திரத்தை நாம் பாராயணம் செய்து அவரை முழுமையாக சரணடைந்து வழிபாடு செய்தாலும் ராகு தோஷம் முழுமையாக நீங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |