பங்குனி உத்திர ஆராட்டு விழா.., சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தை தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இவை தவிர, பங்குனி உத்திர ஆராட்டு விழா மற்றும் சித்திரை விஷு பண்டிகைக்காக நடை திறக்கப்படுவதும் உண்டு.
அதன்படி, இந்தாண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
வரும் 10ஆம் திகதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், 11ஆம் திகதி பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
மேலும், சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகை முன்னிட்டு வரும் 18ஆம் திகதி வரை நடை திறக்கப்படும்.
எனவே, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |