உங்கள் ஜாதகத்தில் சனி எந்த கட்டத்தில் இருக்கிறார்? அதன் பலனை தெரிந்து கொள்ளுங்கள்

By Sakthi Raj Apr 22, 2025 10:37 AM GMT
Report

 ஒருவர் ஜாதகத்தில் சனி மிகவும் முக்கியமான கிரகமாகும். அதாவது சனி அமைந்து இருக்கும் கட்டத்தை பொறுத்து அவர்கள் வாழ்க்கை அமையும் என்றே சொல்லலாம். அப்படியாக உங்கள் ஜாதகத்தில் 12 கட்டங்களில் சனி அமைந்து கொடுக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்.

1ஆம் வீடு:

ஒருவர் தம் ஜாதகத்தில் முதல் பாவத்தில் சனி கிரகம் அமைய பெற்று இருந்தால், அவர்கள் மிக உயரமான மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவராக இருப்பார். இவர்களுக்கு இறைவன் மேல் அவ்வளவு நம்பிக்கை இருக்காது. வாழ்வில் விரக்தி மற்றும் தனியாக வாழும் தன்மை அமையும்.

2ஆம் வீடு:

இரண்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவருக்கு மாமிச உணவுகள் மீது அதிகம் ஆர்வம் இருக்கும். கல்வி கற்க வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் அவை தடங்களில் முடியும். உடல் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.

3ஆம் வீடு:

மூன்றாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர், இளமை காலத்தில் அதீத துன்பம் அனுபவித்து முதுமையில் மிகுந்த யோகம் பெறுவார்கள். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. சகோதரர்களிடம் அவ்வளவு ஒற்றுமையான உறவு இருக்காது.

4அம்வீடு:

நான்காம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர், தந்தை வழி சொத்துக்களால் கஷ்டத்திற்கு ஆளாகலாம். உறவினர்கள் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படும். முன் கோபம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மந்த நிலையில் காணப்படுவார்கள்.

சமைக்கும் உணவில் அடிக்கடி முடி விழுகிறதா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

சமைக்கும் உணவில் அடிக்கடி முடி விழுகிறதா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

5ஆம்வீடு:

ஐந்தாம் பாவத்தில் சனி கிரகம் இருக்கப் பெற்றவருக்கு, குழந்தை பெறுவதில் சில சிக்கல் உண்டாகலாம். வறுமையான சூழல் ஏற்பட்டாலும் அதில் இருந்து மீண்டு வரும் யோகம் பெற்று இருப்பார்கள். சிலருக்கு குழந்தைகளால் சில சிக்கல் உண்டாகலாம்.

6ஆம்வீடு:

ஆறாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்க்கு, வயிற்று கோளாறு ஏற்படலாம். சில எதிர்பாராத ஆபத்துகளை சந்திக்க கூடும். சகோதிரி வழியில் பிரச்சனைகள் சந்திப்பீர்கள்.

7ஆம்வீடு:

ஏழாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர், கால தாமதமான திருமணம் நடக்கும். நல்லதே செய்தாலும் கெட்டவர்கள் என்று பெயர் பெரும் வாய்ப்புண்டு. எப்போதும் ஏழாம் பாவத்தில் எந்த கிரகமும் இருக்கக்கூடாது. ஏழாம் பாவத்தை சுபகிரகங்கள் பார்ப்பதும் ஏழாம் பாவத்தில் உச்ச ஆட்சி ஸ்தானங்களில் இருப்பதும் நன்மை தரும்.

8ஆம்வீடு:

எட்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர், வலிமை மிக்கவராக இருப்பார்கள். வாழ்க்கை எப்பொழுதும் போராட்டமாக இருக்கும். ஆனால் இவர்களிடம் வம்பு கொண்டால் அவர்கள் இடம் தெரியாமல் போகும் வாய்ப்பு உண்டு. இவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

9ஆம்வீடு:

ஒன்பதாவது பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர், கடற்பயணம் மேற்கொள்வார்கள். ஜோதிடம் கற்று கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். ஒன்பதாம் பாவம் யோகபாவம் என்றாலும் இந்த பாவத்தில் பாவ கிரகங்கள் தீய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.

10ஆம்வீடு:

சனி கிரகங்கள் பத்தாம் பாவத்தில் அமர்ந்து இருந்தால் கூட்டத்தின் தலைவராக இருப்பார். இவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்று மாறி மாறி சந்திக்கும் நபர் ஆவார்கள். இவர்கள் இருக்கும் இடத்தை காட்டிலும் தொலை தூரம் சென்று வேலை பார்க்கும் யோகம் உண்டாகும்.

11ஆம் வீடு:

பதினோராம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர், அரசாங்க வேளையில் அதிகம் சம்பாதிப்பவர்க இருப்பார்கள். மிகவும் ஞானமாகவும் அதிக சொத்துக்கள் சேர்க்கும் யோகம் உள்ளவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் நல்ல மதிப்பு உண்டாகும். இவருக்கு வீடு, வாகனம்,ஆடு, மாடு ஆகியவற்றுடன் வசதியான வாழ்க்கை அமையும்.

12ஆம் வீடு:

பன்னிரெண்டாம் பாவத்தில் சனி கிரகம் அமையப் பெற்றவர்.எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நெருங்கிய சொந்தங்களே இவர்களுக்கு எதிரியாக மாறும் வாய்ப்புகள் உண்டு. இவர்கள் ஒன்றை நினைத்து விட்டால் அதை நிறைவேற்றி விடவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US