கும்ப ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜ யோகம்.. பண மழை யாருக்கு?
ஜோதிட சாஸ்திரத்தின் படி சந்திர பகவான் மிகவும் வேகமாக நகரக்கூடியவராக இருக்கிறார். சந்திர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதற்கு 2 அரை நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.
அதனால் அவர் பிற கிரகங்களுடன் இணைந்து அவ்வப்போது நிறைய யோகங்களை நமக்கு கொடுக்கிறார். அவர் தற்பொழுது செவ்வாய்யுடன் இணைந்து மகாலட்சுமி ராஜ யோகம் உருவாக இருக்கிறது. இது சில ராசிகளுக்கு மிகப் பெரிய அளவில் திடீர் மாற்றத்தை கொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராஜ யோகமானது இவர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கப் போகிறது. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறப்போகிறார்கள். திடீர் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தொழில் ரீதியாக சில ஒப்பந்தங்கள் நீங்கள் மேற்கொள்வீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது இவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கப் போகிறது. நீண்ட நாள் இருந்து வந்த அரசியல் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக முதலீடு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை கொண்டு வந்து சேர்க்க போகிறது. குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். நீண்ட நாட்கள் பூர்விக சொத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். மனரீதியாக நல்ல அமைதியை பெறுவீர்கள். வாழ்க்கையில் நல்ல ஆனந்தமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |