கருடனுக்கு விஷ்ணுபகவான் கூறிய புராணம்

By Yashini Sep 11, 2024 10:30 AM GMT
Report

விஷ்ணு என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார்.

மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார். 

அதேபோல், பறவைகளின் ராஜா என்று அழைக்கப்படும் கருடன் திருமாலின் வாகனம் ஆவார்.

திருமாலின் வாகனமுமாக கருதப்படும் கருடனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை திருமால் எடுத்துரைக்கும் புராணம் கருடபுராணம் ஆகும்.

கருடனுக்கு விஷ்ணுபகவான் கூறிய புராணம் | Secret Of Reincarnation In Garuda Purana

இது இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும்.

வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.

இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது.

மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US