ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா? உங்கள் வாழ்க்கை துணை இவர்கள்தானாம்
ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் என்பது முக்கியமான ஒரு தோஷமாக பார்க்கப்படுகிறது. மேலும் இவை பலருக்கும் ஒரு வித பயத்தை மட்டுமே உருவாக்குகிறது. ஆனால் செவ்வாய் தோஷத்தால் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகளை நாம் பார்க்க தவறுகின்றோம்.
அப்படியாக செவ்வாய் தோஷம் இருப்பவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும், அவர்களுடைய வாழ்க்கை துணையின் குண நலன்கள், தொழில் இவை எல்லாம் எவ்வாறு அமையும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் வீரம் சாகசம் தைரியம் போன்றவைகளின் காரணியாக இருக்கிறார். மேலும் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் திருமணத்தடை அல்லது திருமண வாழ்க்கையில் விரிசல் போன்றவை உருவாகும் என்றும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது.
ஆனால் செவ்வாய் தோஷமானது ஒருவர் வாழ்க்கையில் தீய பலன்களை மட்டுமே கொடுப்பது அல்ல. அவை ஒருவருக்கு மிகச்சிறந்த நன்மைகளையும் தருகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து (1,4,7,8,12) இந்த இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அவை செவ்வாய் தோஷம் என்று கணக்கிடப்படுகிறது.
மேலும் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் சில குழப்பங்கள் உருவாகும் என்கிறார்கள். ஆனால் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு வாழ்க்கை துணை மிகவும் தைரியமான நபராகவும் நம்பிக்கையான ஒரு மனிதராகவும் இருப்பார்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் துணை எப்பொழுதும் இவர்களுக்கு உடன் நின்று சமாளிக்கும் தைரியத்தையும் அன்பையும் கொடுக்கக் கூடியவர்கள். ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அந்த நபர் அரசியல், நிர்வாகம், காவல்துறை போன்ற துறைகளில் பெரிய அதிகாரம் பெற்று இருப்பார்கள்.
அவர்களுடைய வார்த்தையை தட்டாது பிறர் பின்பற்றும் படியான ஒரு இடத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களும் ஜாதகத்தை செவ்வாய் வலுவாக இருப்பவர்களும் இருப்பார்கள். அதே போல் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் திருமணத்திற்கு பிறகு தன் துணையின் குடும்பங்கள் மத்தியில் ஒரு மந்திரியைப் போல் வாழ்வார்கள்.
இவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் அவர்கள் துணைவியாரின் வீட்டில் கிடைக்கும். மாமியார் வீடு மட்டுமல்லாமல் துணைவியாரை சுற்றியுள்ள சொந்தங்கள் அனைத்தும் இவர்களை ஒரு மிகப்பெரிய அளவில் மதித்து நடத்துவார்கள்.
பரிகாரங்கள்:
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் சில பரிகாரம் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிறிய இன்னல்கள் விலகி இன்னும் அவர்கள் அதிக சந்தோசத்துடன் வாழலாம். அப்படியாக இவர்கள் செவ்வாய் கிழமை அன்று ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்ல பலனை கொடுக்கும்.
அதே சமயம் முருகப்பெருமாள் துர்க்கை அம்மன் வழிபாடும் இவர்களுக்கு மிக உகந்ததாக இருக்கும். இவர்கள் பிரதோஷ காலங்களில் சிவபெருமான் ஆலயம் சென்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் வில்வ இலைகளை சமர்ப்பித்து வழிபாடு செய்தாலும் இவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







