மனிதனின் வயதை எவ்வாறு கணக்கிடுவது?
உலகில் பொய் பேசாமல்,வாழ்கின்ற வாழ்க்கையில் சலிப்படையாமல்,நீதியும் நேர்மையுமாக வாழ்கின்ற மனிதனை யாருக்குதான் பிடிக்காது?அப்படியாக ஒரு முறை திருத்தல யாத்திரையை மேற்கொண்ட துறவி அந்த ஊராரிடம் இந்த ஊரில் "பொய் பேசாத" மனிதர் யார் என்று கேட்கிறார்?
அதற்கு பெரும்பாலான மக்கள் ஒருவரையே குறிப்பிடுகின்றனர்.அவர் பெயர் தான் சுப்பிரமணியம்.அவருக்கு நான்கு மகன்கள். செல்வந்தரான அவர் தர்ம சிந்தனையோடு வாழ்பவர் என்று சொன்னார்கள்.உடனே துறவிக்கு அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல்.
துறவியும் சுப்பிரமணியம் வீட்டிற்கு செல்கிறார்.அவரை பார்த்த சுப்பிரமணியம் மிகுந்த பணிவோடு துறவியை வரவேற்றார்.பிறகு சுப்பிரமணியம் ஐயா தாங்கள் எங்கள் வீட்டில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று சொல்ல துறவிக்கோ இவரை பரிசோதிக்காமல் அவர் வீட்டில் உணவு எடுத்து கொள்ள கூடாது என்று சில் கேள்விகளை கேட்கிறார்.
முதலில் அவரின் வயதை கேட்க விரும்பினார்.அதற்கு சுப்பிரமணியம் என்னுடைய வயது மூன்று வருடம்,ஐந்து மாதம் ஏழு நாள் என்கிறார். அதை தொடர்ந்து தாங்களுக்கு எத்தனை குழந்தைகள்?என்று கேட்க அதற்கு சுப்பிரமணியம் ஐயா எனக்கு ஒரு மகன் உள்ளார் என்று பதிலளிக்கிறார்.
சரி என்று கடைசியாக தங்களிடம் இப்பொழுது எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்க?அதற்கு இருபத்தி இரண்டாயிரம் ரூபாய் உள்ளது என்று சுப்பிரமணியம் சொல்ல,துறவிக்கு ஒரே அதிர்ச்சி இவ்வளவு பொய் பேசுகிறார்.
இவரை ஊரார் உண்மை பேசுபவர் என்று சொல்கிறாரே என்று சுப்பிரமணியம் தாங்கள் ஏன் வரிசையாக என்னிடம் பொய் கூறினீர்கள்?உங்களை எப்படி ஊர் மக்கள் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று நேரடியாக துறவி சொல்லிவிட்டார்.அதற்கு துறவி ஐயா நான் தங்களிடம் பொய் எதுவும் சொல்ல வில்லை நீங்கள் நான் சொன்ன பதிலை யோசித்தால் உங்களுக்கு உண்மை புரிய வரும் என்கிறார் சுப்பிரமணியம்.
அதோடு அவர் வரவு செலவு கணக்கை எடுத்து வந்து துறவியிடம் காண்பிக்கிறார்.அதில் கையிருப்பு லட்சம் ரூபாய் இருந்தது.அதற்கு துறவி லட்சம் ரூபாய் இருந்தும் தங்களிடம் 22000 ரூபாய் மட்டுமே இருந்ததாக சொன்னீர்களே அதன் காரணம் என்ன?
அதற்கு சுப்பிரமணியம் ஐயா என்னிடம் லட்சம் ரூபாய் இருந்தாலும் நான் சம்பாதித்தது 22000 தான்.அதாவது நான் தானம் செய்த தொகை.இவை தான் என் கணக்கில் உண்மையாக சேரும் பணம் என்றார்.மனிதனுடன் இறுதி வரை வருவது தர்மம் தானே என்று சொல்ல, பிறகு துறவி சரி தங்களுக்கு நான்கு மகன்கள் இருந்தும் ஒரு மகன் மட்டுமே என்று சொன்னது ஏன்?என்று கேட்க,அதற்கு சுப்பிரமணியம் ஐயா எனக்கு நான்கு மகன்கள் இருந்தாலும் அதில் மூன்று மகன்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து நடப்பதில்லை.
வேண்டும் என்றால் நீங்களே பாருங்கள் என்று வரிசையாக முதல் மூன்று மகன்களை கூப்பிட ஒவ்வொருவரும் வரமுடியாது என்பதற்கு ஒவ்வொரு பதில் கொடுத்தனர்.ஆனால் கடைசி மகனை அழைக்கும் பொழுது தந்தை கூப்பிட்ட குரலுக்கு வந்தான்.
பிறகு துறவியிடம் சுப்பிரமணியம் பார்த்தீர்களா ஐயா!என்னை மதிக்காத மூன்று மகன்கள் பாவத்தின் அடையாளம். உடனே துறவி மகிழ்ந்து போய் எல்லாம் சரி தங்கள் வயதில் சொன்ன பொய் எதற்கு என்று கேட்க?அதற்கு சுப்பிரமணியம் ஐயா வாழும் நாட்களில் நாம் கடவுளை சிந்திக்கும் நேரம் மட்டுமே நம்முடையது.
அதாவது நான் இறைவனை மனதார நினைத்து பூஜை செய்த நேரத்தை மட்டும் தங்களிடம் என்னுடைய வயதாக குறிப்பிட்டேன் என்றார். பிறகு துறவி மிகுந்த மன மகிழ்ச்சியில் சுப்பிரமணியிடம்,ஆம் தாங்கள் சொல்வது உண்மை தான் நான் ஒத்துக்கொள்கிறேன் என்றார்.
பிறகு ஒரு மனிதனை தர்மமே வாழவைக்கும்,பெற்றோரை மதிப்பவர்கள் நல்ல குழந்தைகள் என்றும்,கடவுளுக்கு அர்ப்பணிக்கும் நேரமே நம்முடைய நேரம் என்று உண்மையை உணர்த்திய தாங்கள் வீட்டில் உணவு அருந்துவதில் மிக்க மகிழ்ச்சி என்று சொன்னார் துறவி.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |