குடும்பத்தில் வம்ச வழியாக பெண் சாபம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?
இந்த உலகத்தில் சாபம் என்றாலே அது பொல்லாதது. அதிலும் பெண் சாபம் என்பது மிகவும் கொடியதாக இருக்கிறது. ஒரு பெண் மனம் துடித்து ஒரு சாபம் விடுகிறார் என்றால் நிச்சயம் அந்த சாபம் ஆனது அந்த நபரை மிகப்பெரிய அளவில் தாக்கி விடுகிறது. அதை நாம் நடைமுறை வாழ்க்கையிலும் பார்க்கலாம்.
அந்த வகையில், ஒரு குடும்பத்தில் வம்ச வழியாக பெண் சாபம் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு குடும்பத்தில் பெண் சாபம் இருக்கிறது என்றால் அந்த குடும்பத்தில் அந்த பெண்ணினுடைய திருமண வாழ்க்கையில் அவ்வளவு இனிமையாக இருப்பது இல்லை.

அதேபோல் தாத்தா அப்பா என இவர்கள் எல்லோருக்கும் இரண்டு தாரம் அமைப்பு இருப்பதையும் நாம் பார்க்கலாம். வீட்டில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு எப்பொழுதும் திருமணம் தாமதமாகவே நடைபெறுகிறது.
பெண் சாபம் இருக்கின்ற குடும்பத்தில் எப்பொழுதும் பிரச்சனை ஏற்படுகிறது. தீர்க்க முடியாத பிரச்சினையாகவே சில நேரங்களில் அவை மாறி விடுகிறது.

இவ்வாறான பிரச்சனைகள் இருந்தால் அந்த குடும்பத்தில் பெண் சாபம் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் அந்த சாபத்தை போக்குவதற்கு காவேரி, கங்கை, மகாநதி கரையில் சாளக்கிராமத்தில் முன்பாக அரசமரம் கன்று நட்டு வழிபடுவது ஒரு நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
மேலும், உங்களுடைய ஜாதகங்களை ஒரு நல்ல ஜோதிடரை பார்த்து அணுகி அதற்கு தகுந்தார் போல் பரிகாரம் செய்வதும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். இந்த பெண் சாபம் போக்குவது என்பது கட்டாயமாக சாத்தியம் என்றாலும் அதனை நாம் முழு மனதார செய்கின்ற பொழுது நமக்கு நல்ல பலன் கிடைக்கிறது
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |