2026: டிசம்பர் 12, 18 தேதிகளில் கவனம்..சிம்ம ராசிக்கான டிசம்பர் மாத பலனும் பரிகாரமும்
ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது. காரணம், கிரகங்களில் நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் டிசம்பர் மாதத்தில் இடம் மாறுகிறார்கள்.
அப்படியாக, ஜோதிட ரீதியாக இந்த மாற்றம் சிம்ம ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது? மேலும், கிரக மாற்றங்களால் டிசம்பர் மாதம் முழுவதும் சிம்ம ராசியினருக்கு என்னென்ன விஷயங்கள் பாதகமாகவும் சாதகமாகவும் அமையப்போகிறது என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
சிம்ம ராசியினர் சந்தித்து வந்த அஷ்டம சனி வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த மாதம் இவர்களுக்கு நிம்மதி கிடைக்கப் போகிறது.

மேலும், ராகு பகவான் ஏழாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு மாறுவது இவர்களுக்கு குடும்பத்தில் இவ்வளவு நாள் சந்தித்து வந்த சந்தேகங்கள் தீர்ந்து கணவன் மனைவி இடையே பிரிவினை உண்டு செய்யாமல் காப்பாற்றக் கூடியதாக அமையப்போகிறது.
மேலும், கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கும் இவர்கள் நல்ல தீர்வை சந்திக்க போகிறார்கள், அதோடு ராசிநாதனான சூரியன் டிசம்பர் 15ஆம் தேதி ஐந்தாம் இடத்திற்கு யோக ஸ்தானத்திற்கு இடம் மாறுவதால் அந்த காலகட்டங்களில் இவர்களுக்கு புகழ் நல்ல மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கப் போகிறது.
மேலும், புதன் மற்றும் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நிலுவையில் இருந்து வந்த கடன் இஎம்ஐ சுமைகள் ஆகியவை குறைந்து பணவரவு சிறப்பாக இருக்கப்போகிறது.

டிசம்பர் மாதம் சிம்ம ராசியினர் சூரிய பகவானை பாடல்களை கேட்பது பாராயணம் செய்வது நல்ல பலனை கொடுக்கும். அதிலும், ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுக் கொடுக்கும்.
இவர்கள் சிவன் கோவிலில் சூரியன் மற்றும் சந்திரனை வழிபாடு செய்து கோதுமை மற்றும் சர்க்கரை பொங்கல் படைப்பது நல்ல பலன்களை கொடுக்கும். மேலும், டிசம்பர் 12 மற்றும் 18 ஆம் தேதிகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும் என்று பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |