ஒரு முறை சொன்னால் ஏழு தலைமுறை பாவங்கள் போக்கும் சிவ மந்திரம்

By Sakthi Raj Sep 16, 2026 06:24 AM GMT
Report

ஒருவருடைய வாழ்க்கையில் அவர்களுடைய ஆணவம் "தான்" என்கின்ற அகங்காரம் கர்ம வினைகள், செய்த பாவங்கள் இவை எல்லாம் அடியோடு அழிய வேண்டும் என்றால் அவர்கள் நிச்சயம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

சிவ மந்திரங்களை அவர்கள் பாராயணம் செய்ய துவங்கும் பொழுது அவர்கள் பிறவி பலனை அடைகிறார்கள். அந்த வகையில், நாம் எந்த பிறவியில் என்ன பாவம் செய்திருப்போம் என்பதை நிச்சயம் நம்மால் அறிய முடியாது. எதற்காக இந்த பிறவியில் நாம் இந்த கஷ்டங்களை அனுபவிக்கின்றோம் என்பதற்கான பதிலும் நமக்கு கிடைக்காது.

ஒரு முறை சொன்னால் ஏழு தலைமுறை பாவங்கள் போக்கும் சிவ மந்திரம் | Siva Mantras To Remove 7 Generation Sin

தீராத நோய்களையும் தீர்க்கும் இறை வழிபாட்டு ரகசியம்

தீராத நோய்களையும் தீர்க்கும் இறை வழிபாட்டு ரகசியம்

ஆனால், அதை நாம் அனுபவித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த வகையில், நம்முடைய சாஸ்திரங்களில் படி கர்ம வினைகள் நம்மை பின் தொடர்வதாக நம்புவதுண்டு. அதனால் எந்த பிறவியில் செய்திருந்தாலும் அது இந்த பிறவியில் தாக்காமல் இருப்பதற்கும் மீண்டும் ஒரு பிறவியில் அவை வராமல் இருப்பதற்கும் இறைவனை மனதார பிரார்த்தனை செய்து மன்னிப்பு கேட்பது என்பது மிகவும் அவசியம்.

அந்த வகையில், ஒரு முறை சொன்னால் ஏழு தலைமுறை பாவங்களை போக்கக்கூடிய சிவ மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை நாம் பாராயணம் செய்கின்ற பொழுது நிச்சயம் சிவபெருமானுடைய பரிபூரண அருளால் தெரிந்தும் தெரியாமலும் செய்த வினைகள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை.

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அமோகமாக மாறுமாம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அமோகமாக மாறுமாம்

மந்திரம்:

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹ
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்

ஒரு முறை சொன்னால் ஏழு தலைமுறை பாவங்கள் போக்கும் சிவ மந்திரம் | Siva Mantras To Remove 7 Generation Sin  

இந்த மந்திரத்தை சிவ ஆலயங்களில் அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வீடுகளில் பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் பொழுது நிச்சயம் நல்ல மாற்றம் உண்டு. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US