தெரியாமலும் இந்த வார்த்தை பயன்படுத்திவிடக்கூடாது ?
நம் முன்னோர்கள் பல விஷயங்களையும்,வார்த்தைகளையும் பேசக்கூடாது என்று சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் நாம் அந்த செயலை செய்து பின் உணர்ந்து கொள்வது உண்டு.
அப்படியாக ஒரு நாள் ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டி கொண்டு இருந்தான்.
இதை கவனித்து கொண்டு இருந்த உமாதேவியார் , இவன் என்ன முட்டாளாக இருக்கின்றானே, கீழே விழுந்தால் என்ன ஆவது?உயிர் அல்லவா போய்விடும் என்று சிவபெரிமானிடம் சொல்லிக்கொண்டிருக்க , சிவபெருமானும் சரி அவன் மர கிளைகள் ஒடிந்து கீழே விழும் வேளையில் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ சென்று காப்பாற்று.என்னை கூப்பிட்டால் நான் சென்று காப்பாற்றுகிறேன் என்றாராம்.
இப்படி பேசி முடித்த இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள் . அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. யாரை அழைப்பான் என்று பார்க்க பதிலுக்கு மரவெட்டி “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான்.
விழுந்த வேகத்தில் இறந்து போனான். உமாதேவியார் என்ன இறந்து விட்டானே என்று சோகத்தில் மூழ்க அதற்கு சிவ பெருமான் அவன் உன்னையும் என்னையும் கூப்பிட்டு இருந்தால் பிழைத்திருப்பான்.
ஆனால் உயிரை பறிக்கும் எமனின் மனைவி "ஐயோ" அல்லவா கூப்பிட்டான்.அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றார். இதனால்தான் எந்த செயலைச் செய்யும்போதும் “ஐயோ” என்று சொல்லக்கூடாது என்பதற்காக நம் முன்னோர் கூறிய கதைதான் இது.
மேலும் நமக்கு தெரியாமல் நம்மைச் சுற்றி தேவதைகள், தேவதூதர்கள் இருப்பார்களாம். நாம் சொல்வதற்கெல்லாம் 'ததாஸ்து'அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுப்பார்களாம். இனி பேசும் போது மிக கவனமாக பேச வேண்டும். தீய வார்த்தைகளை குறைத்து நன்மை தரும் வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |