சிவன் நம்மை ஆட்கொண்டால் துன்பமா ?இன்பமா?

By Sakthi Raj Apr 21, 2024 11:54 AM GMT
Report

நாம் கேள்வி பட்டு இருப்போம் சிவன் அவருக்கு பிடித்த உயிரை ஆட்கொள்வார் என்று.அப்படி சிவன் ஒருவரை ஆட்கொண்டால் என்ன நடக்கும் ? அந்த மனிதருக்கு இன்பமா? துன்பமா? என்று பார்ப்போம்.

சிவன் ஒருவரை ஆட்கொள்கிறார் என்றால் அந்த மனிதன் வாழ்வில் மேன்மை அடைய போகிறார், முக்தி நிலைக்கு செல்ல போகிறார் என்று பொருள்.

சிவன் நம்மை ஆட்கொண்டால் துன்பமா ?இன்பமா? | Sivanperuman Natrajar Yoginillai

சிவ பெருமான் போல ஓர் சிறந்த ஆசிரியர் இந்த உலகில் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பாடம்.

ஒரே இரவில் நான் உலகம் அறிந்தேன் ,கற்றுத் தெளிந்தேன் என்று சொன்னவர் எவரும் இல்லை.அதே போல் தான் வாழ்க்கையில் பல நிலைகளை கடந்து தான் ஞானம் என்ற நிலை அடைய முடியும்.

சிவ பெருமான் நம்முள் வர பல துன்பங்கள் வரும்.அந்த கற்பித்தலில் இருட்டும் வெளிச்சமும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.ஆனால் ஈசன் அந்த கற்பித்தலில் ஒரு நொடியும் நம்மை கை விடமாட்டார்.

சிவன் நம்மை ஆட்கொண்டால் துன்பமா ?இன்பமா? | Sivanperuman Natrajar Yoginillai

நம்மை பொய்யான வாழ்க்கையில் இருந்து உண்மை நிலைக்கு அவன் இழுத்து செல்லும் பொழுது அது நிச்சயம் துன்பமாகத்தான் இருக்கும். முதலில் சிவ பெருமான் நம்முள் இருக்கும் "தான் என்ற கர்வத்தை"அடியோடு அழிப்பார்.

அந்த அழிவிற்கு பாதி உயிர் போய் வரும்.ஆனால் இறுதியில் உண்மை உணர்ந்து எம்பெருமானே என்று கண்ணீர் வடித்து அவன் கால்களை பற்றி கொள்ளுவோம்.

கள்ளழகருக்கு அணிவிக்கும் ஆடையில் ஒளிந்திருக்கும் ரகசியம்

கள்ளழகருக்கு அணிவிக்கும் ஆடையில் ஒளிந்திருக்கும் ரகசியம்


சதா சிவா சிவா என மனம் என்று சொல்ல தொடங்குகிறதோ, அன்று முதல் உலகத்தின் நொடி பொழுதையும் உண்மையின் அடித்தளத்தையும்,பிறப்பின் அதிசயத்தையும் உணருவோம்.

பொன் பொருள் மண் உயிர்நாடி எல்லாம் நொடியில் மாறும் ஜாலம்.அவனின் ஆட்டம். அவனின் வித்தை என உணருவோம்.

சிவன் நம்மை ஆட்கொண்டால் துன்பமா ?இன்பமா? | Sivanperuman Natrajar Yoginillai

ஆதலால் அவனை தவிர எல்லாம் பற்றற்று போகும். அவன் இன்றி எதுவும் இல்லை.

வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் எடுத்து கொள்.ஆனால், மனதில் கோயில் கொண்டு இருக்கும் ஈசனே உன்னை தவிர எல்லாம் எடுத்துக்கொள் என மனம் கதறும்.

அப்படியான ஆனந்த யோகி நிலை தான் உலகத்தின் உச்சக்கட்ட ஞான நிலை,ஆம் அவன் ஆட்கொண்டால் உடலும் உயிரும் ஞானத்தை அடைய செத்து பிழைத்து, பின் தான் அவன் காலடியை பற்றி கொள்ளமுடியும்.

அந்த பற்றுதலில் தான் ஆனந்த நிலை இருக்கிறது.அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் செத்து பிறக்கலாம். ஈசன் அவன் தான் எல்லாமே எல்லாமும்.ஓம் நமசிவாய!!!! 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US