தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மறந்தும் மகன் செய்யக்கூடாத காரியங்கள்

By Sakthi Raj Feb 05, 2026 11:30 AM GMT
Report

எல்லா மனிதர்களுக்கும் தந்தை என்பவர் மிகவும் முக்கியமானவர். அதனால் தான் ஜோதிடத்திலும் தலைமை கிரகமாக இருக்கக்கூடிய சூரிய பகவான் தந்தையை குறிக்க கூடியவராக இருக்கிறார். மேலும் ஜோதிடத்தில் தந்தையை பித்ரு தேவோ பவ என்று போற்றப்படுகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் எந்த நிலைமையில் இருக்கிறாரோ அதை பொறுத்து தான் அந்த நபருக்கு தந்தையுடன் இருக்கக்கூடிய உறவு அமைந்திருக்கும். அந்த வகையில் சாஸ்திர ரீதியாக தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மகன் சில செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மறந்தும் மகன் செய்யக்கூடாத காரியங்கள் | Son Must Avoid 5 Things When His Father Is Alive

மனிதர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 15 முக்கிய இடங்கள்.. என்ன தெரியுமா?

மனிதர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 15 முக்கிய இடங்கள்.. என்ன தெரியுமா?

ஒரு மகன் அவருடைய தந்தை உயிருடன் இருக்கும் பொழுது எக்காரணத்திற்கும் அவர்களுடைய மூதாதையர்களுக்கு நேரடியாக பிண்ட தானம் அல்லது தர்ப்பணம் செய்தல் கூடாது. இந்த மத சடங்குகளை செய்வதற்கு தந்தைக்கே முதல் உரிமை உண்டு.

மகன் தந்தையின் அனுமதி இல்லாமல் அல்லது அவரது முன்னிலையில் அவ்வாறு செய்யும் பொழுது அது வேதங்களுக்கு எதிரானதாக கருதப்படுகிறது. வீட்டில் நடக்கக்கூடிய முக்கியமான யாகம் அல்லது பூஜையை குடும்பத் தலைவர் தந்தை தான் செய்ய வேண்டும்.

ஒரு மகன் மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும் தந்தைக்கு உரிய இடத்தை அபகரிக்கவும் அல்லது அவருடைய அதிகாரத்தை அபகரிக்கவும் செய்தல் கூடாது. தந்தைக்கான முன்னுரிமையை கொடுத்து தான் நாம் எந்த ஒரு காரியமும் செய்ய வேண்டும்.

தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மறந்தும் மகன் செய்யக்கூடாத காரியங்கள் | Son Must Avoid 5 Things When His Father Is Alive

எப்பொழுதும் பாசிட்டிவாக இருக்கும் 3 ராசிகள்.. இவர்களை எல்லோருக்கும் பிடிக்குமாம்

எப்பொழுதும் பாசிட்டிவாக இருக்கும் 3 ராசிகள்.. இவர்களை எல்லோருக்கும் பிடிக்குமாம்

அதைப்போல் நம்முடைய மரபின்படி ஒரு மகன் தனது தந்தை உயிருடன் இருக்கின்ற நேரத்தில் மீசையை முழுவதுமாக எடுக்கக் கூடாது. அதாவது மகன்கள் தங்களுடைய தந்தை இறுதி சடங்கின் பொழுது தான் மீசையை நீக்குவார்கள்.

இது அவர்களுடைய தந்தைக்கு அவர்கள் செலுத்தக்கூடிய மரியாதையாகும். அதனால் தந்தை உயிரோடு இருக்கும் பொழுது மீசையை வெட்ட வேண்டுமே தவிர முழுவதுமாக எடுக்கக் கூடாது. அதேபோல் எந்த ஒரு நல்லது செய்தாலும், தொண்டு செய்தாலும் தந்தை இருக்கும் பொழுது அவருடைய பெயரை பயன்படுத்துவதே மரியாதையாக இருக்கும்.

எந்த ஒரு பொது நிகழ்ச்சிகள் அழைப்புகளில் எந்த ஒரு அகங்காரத்திலும் ஒரு மகன் தனது தந்தையின் முன்னிலையில் முதலில் தனது சொந்த பெயரை எழுதக்கூடாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US