திருப்பதியில் 1 கோடி நன்கொடை வழங்குபவர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகள்
இந்தியாவில் வைணவர்களின் மிக முக்கியமான கோயிலாக திருப்பதி ஏழுமலையான் கோயில் இருக்கிறது. அங்கு இந்தியாவில் மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு சிறப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதாவது திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான சிறப்பு வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.அதாவது திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு கோயிலில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது.
அதில் தற்பொழுது 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சிறப்பு வசதி வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதில் தற்போது மேலும் 2 அறக்கட்டளைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வசதிகளை விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்க பட்டுயிருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்கும் பக்தருக்கு ஒரு வருடத்தில் 3 நாட்கள் சுப்ரபாத சேவை, 3 நாட்கள் விஐபி தரிசனம், 4 நாட்கள் சுபதம் நுழைவாயில் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
அதோடு அவர்கள் தங்களுடன் 4 பேரை அழைத்து செல்லலாம். இவர்களுக்கு 10 பெரிய லட்டுகள், 20 சிறிய லட்டுகள், 1 சால்வை, 1 ரவிக்கை, மகா பிரசாதம் எனப்படும் தீர்த்த பாக்கெட்டுகள் 10 வழங்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை வேதாசீர்வாதம் செய்யப்படும்.
இத்துடன் ரூ.3,000 வாடகையுடன் கூடிய தங்கும் அறைகள் 3 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் வாழ்நாளில் ஒருமுறை, நன்கொடையாளர் அலுவலகத்தில் பொருத்தமான சான்று காண்பித்து பெருமாள் உருவம் பதித்த 5 கிராம் தங்க டாலர் மற்றும் 50 கிராம் வெள்ளி டாலர் ஆகியவற்றை இலவசமாக பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |