ஆன்மீகம்: வீட்டை பெருக்கும் பொழுது செய்யக்கூடாத முக்கியமான தவறுகள் என்ன?

By Sakthi Raj Oct 30, 2026 06:39 AM GMT
Report

 நாம் தினமும் வீடுகளைக் கூட்டி சுத்தம் செய்வது அவசியம். சுத்தமாக இருக்கின்ற இடத்தில் தான் நம்முடைய மனமும் அமைதியாக இருக்கிறது.

அந்த வகையில், ஆன்மீக ரீதியாக வீடுகளை பெருக்கும் பொழுது ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்றும் கவனிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.

நாம் காலை நேரத்தில் வீட்டை பெருக்குகின்ற பொழுது முதலில் வீட்டின் உள்பக்கத்திலிருந்து தான் வெளியே கூட்டி குப்பையை கொண்டு செல்ல வேண்டும்.

ஆன்மீகம்: வீட்டை பெருக்கும் பொழுது செய்யக்கூடாத முக்கியமான தவறுகள் என்ன? | Spiritual Mistakes To Avoid While Sweeping Home

மேஷத்தில் புதன் இருந்தால் தாய் மாமனுக்கு ஆபத்து வருமா?

மேஷத்தில் புதன் இருந்தால் தாய் மாமனுக்கு ஆபத்து வருமா?

அதுவே, மாலை நேரத்தில் வீட்டை பெருக்குகின்றோம் என்றால் வாசலில் இருந்து உள் பக்கம் தான் பெருக்கி வர வேண்டும்.

அதேபோல், வீடுகளில் சேர்ந்த குப்பைகளை எப்பொழுது அள்ளி குப்பை தொட்டியில் போட வேண்டும். ஒரு மூலையில் குப்பைகளை ஒதுக்கி வைக்ககூடாது.

மேலும், எதற்காக மாலை நேரங்களில் நாம் வாசலில் இருந்து உள் பக்கம் நோக்கி பெருக்க வேண்டும் என்றால் மாலை நேரங்களில் மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு வருகை தருகிறார் என்று சொல்லப்படுகிறது. மகாலட்சுமியின் பரிபூர்ண அருளை பெற இவ்வாறு செய்வது அவசியம் ஆகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US