தீராத நோய்களுக்கு மருந்தாகும் முருகன் சிலையின் வியர்வை
தமிழகத்திலேயே நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட சிலை என்றால் அது பழநி முருகன் கோவில் சிலை தான்.
பழனி மட்டுமின்றி சென்னையில் வடபழனி சித்தர் உருவாக்கிய நவபாஷாண முருகன் சிலை உள்ளது.
முருக பக்தராக வாழ்ந்த வடபழனி சித்தர், போகரைப் பின்பற்றி நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார்.
நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட இக்கோயில் ஸ்ரீ நவபாசன ராஜ முருகன் திருக்கோவில் என்று பெயர் பெற்றது.
நவபாஷாணச் சிலை என்பது நச்சுத்தன்மை நீங்கி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் அற்புத ஆற்றல் கொண்டதாக நம்பப்படுகிறது.
இதனால் நவபாஷாண முருகன் சிலைக்கு செய்யப்பட்ட அபிஷேக தீர்த்தங்களை அருந்தினால், உடல் பிணிகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
அந்தவகையில், இக்கோவிலில் அருள்பாளிக்கும் முருகனின் சிறப்புகள் குறித்து குருக்கள் தியாகராஜன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |