ஸ்ரீரங்கம் அரங்கநாதனுக்கு ஏற்பட்ட ஆபத்து?நடந்தது என்ன?
ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரெங்கனை காண தவம் செய்திருக்க வேண்டும்.ரெங்கநாதா என்று சொல்ல மனம் அவனை பார்த்திட துடிக்கும்.
ரெங்கன் அற்புதமானவன்.பாடம் கற்பித்து வாழ்வை செம்மையாக்குபவன்.நம் மனதில் ரெங்கநாதன் மட்டுமே குடிகொண்டு இருக்க,அவனை மட்டும் நினைத்து வாழ பல பிறப்பெடுக்க ஆசையை துண்டுபவன்.ஆனால் அந்த ரெங்கனுக்கும் இன்னல்கள் வந்திருக்கிறது.
அதாவது பல வருடங்கள் முன் ஸ்ரீ ரங்கம் கோயிலில் இருக்கும் செல்வங்கள் கொள்ளையடித்த ஒரு கூட்டம் இன்னும் இன்னும் என்று அரங்கனுடைய விலையுயர்ந்த செல்வங்களை கொள்ளை அடிக்க அங்கேயே கூடாரமிட்டி இருந்தினர்.
மறுபுறம் மக்கள் அரங்கனுடைய விலையுயர்ந்த பொருட்களை காக்க இரவும் பகலும் ஓயாமல் அந்நியப்படையுடன் போரிட்ட கொண்டு இருந்தார்கள் .
அந்த நேரத்தில் அரங்கனின் சேவைக்காக கோயிலில் தொண்டு செய்து வந்தவள் வெள்ளையம்மாள். அரங்கனின் தீவிர பக்தை . ஒரு நாள் அந்நியப்படையின் தளபதிக்கு ஆசை நாயகி வேண்டும் என்று கேட்க அதற்கு தானே முன் வந்து வெள்ளையம்மாள் சம்மதம் தெரிவித்தாள்.
அதை கேட்ட .ஊர் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.அரங்கநாதனையே நினைத்து வாழும் வெள்ளையம்மாள் ஏன் இப்படி செய்தால்என்று ?ஆனால் இதை விட பேரதிர்ச்சி ஒன்று அனைவருக்கும் காத்திருக்க அது ரெங்கநாதனுக்கே தெரியாமல் போனது.
பின்,எப்படியோ சூழ்ச்சியால் ஸ்ரீ ரங்கத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் வீரர்கள் அனைவரும் மதுவுண்ட களிப்பில் மயங்கி இருந்தனர். அன்று நள்ளிரவில் வெள்ளையம்மாள் அந்நியப்படை தளபதியை சந்திக்க ஆசைப்பட்டாள்.
அவரிடம் சென்று தாங்கள் இங்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டது அல்லவா ?பிறகு ஏன் இன்னும் உங்கள் நாட்டிற்கு திரும்பவில்லை என்று கேட்க அதற்கு, அந்த தளபதி உங்கள் நாட்டில் இன்னும் விலையுயர்ந்த பொருட்கள் இருக்கிறதாம்.அது எங்கு இருக்கிறது என்று தெரிந்தால் அதை எடுத்து கொண்டு கிளம்பிவிடுவோம் என்று பதிலளித்தார்.
அதற்கு வெள்ளையம்மாள் அவ்வளவு தானே? நீங்கள் தேடும் அந்த பொருள் எங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியும்.அதோ தெரிகிறதே கிழக்கு கோபுரம் அதன் உச்சியில் தான் உள்ளது என்றாள் வெள்ளையம்மாள்.
வாருங்கள் சென்று காண்பிக்கிறேன் என்று சொல்ல மிகவும் பேராசை பிடித்த படை தளைபதி ஆவலுடன் பின் செல்ல கோபுரத்தின் உச்சிக்கு செல்ல தன்னுடன் வந்த படைத்தளபதியை கீழே தள்ளிக் கொன்று தானும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாள் வெள்ளையம்மாள்.
பின் தளபதி இல்லாத வீரர்களை அடித்து விரட்டினர் ஊர் மக்கள். பின் வெள்ளையம்மாள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டாள் .
இத்தனை வெள்ளை உள்ளம் கொண்ட வெள்ளையம்மாள் பெயரால் இன்றும் அக்கோபுரம் வெள்ளை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |