கொட்டி கொடுக்க வரும் சுக்கிரன் - திடீர் கோடீஸ்வர யோகம் எந்த ராசிகளுக்கு?

By Sakthi Raj Jun 02, 2025 12:01 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் அவர்கள் தங்கள் ராசியை மாற்றுகிறார். இந்த மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் ஒரு வித தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் ஒரு மனிதனின் காதல் வாழ்க்கை அழகு ஆடம்பரம் செல்வம் செழிப்பு இவற்றிக்கு காரணியாக இருக்கக்கூடியவர் சுக்கிரன்.

அவர் மே 16ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்தார். சுக்கிரனின் இந்த பயணம் சில ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

மிதுனத்தில் அஸ்தமனமாகும் குரு.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 5 ராசிகள்

மிதுனத்தில் அஸ்தமனமாகும் குரு.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 5 ராசிகள்

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு சுக்கிரன் பகவான் இடமாற்றம் வாழ்க்கையில் நல்ல தெளிவை கொடுக்க உள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் காணப்படும்.

மீனம்:

மீன ராசிக்கு சுக்கிரனின் இந்த இடமாற்றம் உங்களுக்கு மிக சிறந்த ஆளுமை திறனை கொடுக்க உள்ளது. திடீர் பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையால் சிறந்த பலனை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு இந்த இடமாற்றம் வியாபாரத்தில் நல்ல மாற்றத்தை உண்டு செய்யும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் சரி ஆகும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US