இன்றைய ராசிபலன் (29.07.2024)
மேஷம்
நீங்கள் எடுக்கும் முயற்சியில் இருந்த தடை விலகும்.மனதில் தேவை இல்லாத குழப்பம் அதிகரிக்கும்.செய்யும் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை.மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.
ரிஷபம்
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு உயரும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை உருவாகும்.நேற்று மனதில் இருந்த கஷ்டம் விலகும்.வாழ்க்கைத் துணை உதவிகரமாக இருப்பார்கள்.
மிதுனம்
எந்த வேலையும் பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள்.உங்கள் செயல்களில் கவனம் தேவை. நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வந்து வரும்.வியாபாரம் முன்னேற்றமடையும்.
கடகம்
மனதில் நினைத்த எண்ணம் நிறைவேறும்.விழிப்புடன் செயல்படுவதால் தேவை இல்லாத பிரச்னை விலகும்.. வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறை மாறும்.உங்கள் முயற்சி வெற்றியாகும்.
சிம்மம்
நீங்கள் எடுக்கும் உங்கள் முயற்சி லாபமாகும். மனதில் உள்ள விருப்பம் நிறைவேறும்.வியாபாரத்தில் உங்கள் உழைப்பு அதிகரிக்கும்.குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி
எதிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். எடுக்கும் முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம்
நண்பர்களால் லாபம் உண்டாகும்.மனதில் தெளிவு ஏற்படும்.வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
விருச்சிகம்
எதிர்பாராத சங்கடம் தோன்றும்.எதிரியின் மறைமுகத் தொல்லையால் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும்.
தனுசு உறவினர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும்.செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள.நீண்ட நாள் கைக்கு வரவேண்டிய பணம் வரும்.எதிலும் போராடி வெற்றி காண்பீர்கள்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
கும்பம்
உங்களுக்கு தேவையற்ற பிரச்னை தேடிவரும்.நிதானமாக செயல்படுவது நல்லது.மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக் கொடுப்பீர்கள்.
மீனம்
வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். மனதில் நினைத்தது நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |