சோழபுர காவல் தெய்வம் வீரனாருக்கு 200 கிடாக்கள் வெட்டி தடபுடல் கறி விருந்து
சோழபுரம் கிராம மக்களின் காவல் தெய்வமான வீரனாருக்காக 200 கிடா ஆடுகள் வெட்டப்பட்டு கறி விருந்து நடைபெற்றது.
10,000 பேருக்கு கறி விருந்து
தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் அருள்மிகு வீரனார் திருக்கோயில் அமைந்துள்ளது.
மூன்று கரை சமுதாய மக்களுக்குச் சொந்தமான இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடாவெட்டுத் திருவிழா நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு வீரனாருக்காக நேர்ந்துவிடப்பட்ட 200 ஆடுகளை கோவில் வளாகத்தில் ஏப்ரல் 12ஆம் திகதி இரவு வெட்டப்பட்டது.
பின்னர் சுமார் 2000 கிலோ கறியை சமைக்கப்பட்டு வீரனாருக்குப் படையலிடப்பட்டு, சுடச்சுட சாதத்துடன் கிராம மக்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது.
கிடா விருந்தில் கோனூர் நாட்டைச் சுற்றியுள்ள 32 கிராமத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் கலந்துகொண்டு வீரனாரை வழிபட்டு அசைவ உணவை அருந்தினர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |