நாளை(20.04.2025) பிரச்சனைகள் விலக தேய்பிறை அஷ்டமியில் செய்யவேண்டிய வழிபாடு

By Sakthi Raj Apr 19, 2025 08:10 AM GMT
Report

 சிவபெருமானின் ருத்ர ரூபமாக கருதப்படுபவர் கால பைரவர். இவரை வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகும். மேலும், கால பைரவரை வழிபட சிறந்த நாளாக தேய்பிறை அஷ்டமி விளங்குகிறது.

அன்றைய தினம் ராகு காலத்தில் அவரை மனதார வழிபாடு செய்ய நம்முடைய துன்பங்கள் எல்லாம் விலகி மனதில் தைரியம் பிறக்கும் என்கிறார்கள். அப்படியாக நாளை (20.04.2025) பிரச்சனைகள் விலக தேய்பிறை அஷ்டமியில் செய்யவேண்டிய வழிபாடு பற்றி பார்ப்போம்.

நாளை(20.04.2025) பிரச்சனைகள் விலக தேய்பிறை அஷ்டமியில் செய்யவேண்டிய வழிபாடு | Theipirai Ashtami Worship And Benefits

கால பைரவரை வழிபடுவதற்கான புனித விரதம் காலஷ்டமி. இந்த ஆண்டு சித்திரை தேய்பிறை அஷ்டமி விரதம் ஏப்ரல் 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் நம்மை சுற்றி உள்ள எதிர்மறை வினைகள் எல்லாம் விலக கால பைரவரை வழிபாடு செய்து இந்த 5 பரிகாரங்கள் செய்தால் போதும். நம் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை பெறலாம்.

1. நாம் செய்யும் வியாபாரம் அல்லது தொழில் சிறக்க காலஷ்டமி அன்று பைரவர் கோவிலுக்கு சென்று கருப்பு உளுந்தை பைரவருக்கு அளித்து வழிபாடு மேற்கொள்ளலாம். பிறகு, அந்த உளுந்தில் இருந்து 11 தானியங்களை எடுத்து, கருப்பு துணியால் மூடி, நம்முடைய அலுவலகம் அல்லது தொழில் இடங்களில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவேண்டும்.

ராகு கேது பெயர்ச்சி 2025: எந்த ராசிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்

ராகு கேது பெயர்ச்சி 2025: எந்த ராசிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்

அவ்வாறு வைக்கும் பொழுது கால பைரவரின் மந்திரமான  "ஓம் ஹ்ரீம் பாதுகாய ஆபதுத்தாரணாய குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை நம்பிக்கையோடு சொல்லி வைத்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.

2.சிலர் வாழ்க்கையில் தீராத துன்பத்தை சந்தித்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் நாளைய தினம் கருப்பு நாய்க்கு உணவு அளிக்கும் பொழுது அவர்களின் துன்பத்தின் தாக்கம் குறைகிறது. அதோடு உணவு வழங்கும் பொழுது பைரவரை நினைத்து "ஹ்ரீம் பாதுகாய ஆபதுத்தாரணாய குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை ஐந்து முறை சொல்ல வேண்டும்.

நாளை(20.04.2025) பிரச்சனைகள் விலக தேய்பிறை அஷ்டமியில் செய்யவேண்டிய வழிபாடு | Theipirai Ashtami Worship And Benefits

3. விதியின் சூழ்நிலையால் சிலர் விடுபடமுடியாத சிக்கலில் இருப்பார்கள். அவர்கள் நாளைய தினம் காலஷ்டமி அன்று ஒரு அரச மரத்திற்கு சென்று, அதன் வேரில் தண்ணீர் ஊற்றுவது நல்ல பலன் கொடுக்கும்.

4. ஒரு சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்கள் கையில் பணம் தங்காது. அவர்கள் காலஷ்டமி அன்று குளித்த பிறகு, பைரவருக்கு முறையாக பூஜை  செய்து நெய்வேத்தியம் படைத்து மனதார வழிபாடு செய்தால் வீண் பொருளாதார நஷ்டம் குறையும்.

5. பெரும்பாலான மனிதர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் , அவர்களுக்கு பயம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். அவர்கள் நாளைய தினம் மனதார காலபைரவரை நினைத்து காலபைரவாஷ்டகம் படிக்க அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த பயம் விலகி தைரியம் பிறக்கும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US