ஜோதிடம்: காலை எழுந்த உடன் கண்ணாடி பார்க்கும் பழக்கம் உள்ளதா? இன்றே விட்டுவிடுங்கள்
ஒரு மனிதனுக்கு காலை பொழுது என்பது நன்றாக தொடங்க வேண்டும். அப்பொழுது தான் அன்றைய நாள் முழுவதும் அவர்களுக்கு நேர்மறையாக அமையும். அப்படியாக, வாஸ்து சாஸ்திரப்படி ஒருவர் காலை எழுந்த உடன் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அவ்வாறு செய்ய நம்முடைய தோஷங்கள் விலகுவதோடு நம்முடைய நாளும் நேர்மறையாக அமையும். அந்த வகையில் காலை எழுந்தவுடன் நாம் என்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும்? என்ன விஷயங்களை காலை எழுந்தவுடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
1. வாஸ்து சாஸ்திரத்தில் காலை எழுந்தவுடன் நாம் தவறியும் நம்முடைய நிழலும் அல்லது மற்றவர்களுடைய நிழலையும் பார்க்கக்கூடாது.
அவ்வாறு பார்ப்பது நமக்கு அசுப பலனை கொடுக்கும் என்கிறார்கள். இதனால் நமக்கு மன அழுத்தம், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம் என்று சொல்லப்படுகிறது.
2. சில வீடுகளில் பாத்திரங்களை மறுநாள் கழுவி கொள்ளலாம் என்று போட்டு வைத்து விடுவார்கள். அவ்வாறு செய்ய நாம் காலை எழுந்த உடன் அதை பார்க்க நேரிடும்.
அவ்வாறு அழுக்கு பாத்திரத்தை பார்ப்பது நமக்கு எதிர்மறை ஆற்றலை விளைவிக்கும். ஆக முடிந்த அளவு முதல் நாள் இரவு தூங்கும் முன் அந்த பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்வது நற்பலன் கொடுக்கும்.
3. அதே போல் நம் அறைகளில் ஒரு பொழுதும் ஓடாத கடிகாரத்தை மாட்டி வைக்கக்கூடாது. அவ்வாறு மாட்டி வைப்பது நமக்கு எதிர்மறை ஆற்றலை கொடுக்கும்.அதனால் காலை எழுந்த உடன் ஓடாத கடிகாரம் பார்க்க அந்த நாளே சோம்பேறியாக மாறலாம்.
4. நம்மில் பல பேர் காலை எழுந்த உடன் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்ப்பார்கள். அவ்வாறு பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பார்ப்பது நமக்கு மோசமான பலனை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆக, காலை எழுந்தவுடன் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துவது நன்மை அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |