திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்
திருமணம் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அது அந்த குடும்பத்தில் நடக்கக்கூடிய மிகப்பெரிய நிகழ்ச்சி.
அந்த வகையில் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்காக பத்திரிக்கை அடித்து அதை உறவுகளுக்கு கொடுக்கும்பொழுது சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அப்படியாக, திருமண பத்திரிக்கை கொடுக்கும் முறை என்ன என்பதை பற்றி பார்ப்போம். இப்பொழுது திருமண பத்திரிக்கை பிரிண்ட் அடித்து வீட்டிற்கு வந்தவுடன் அன்றைய நாளிலிருந்து நம் வீடுகளில் அசைவ உணவுகளை சமைக்கக்கூடாது சாப்பிடக்கூடாது.
அதை போல், திருமண அழைப்பிதழ் வந்ததும் முதலில் நாம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து பிறகு முதல் அழைப்பிதழை குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று குலதெய்வம் காலடியில் வைத்தும் பிள்ளையாருக்கும் வைத்தும் வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு பெண் வீட்டிற்கு அல்லது பெண் கொடுக்கும் சம்பந்தி வீட்டிற்கு நாம் பத்திரிகை வைக்க வேண்டும். அடுத்தபடியாக தான் நாம் நெருங்கிய சொந்தங்களுக்கு ஒவ்வொருவராக கொடுக்க வேண்டும்.
அறிக்கை கொடுக்கும் போது ஒரு தாம்பாளத்தில் பங்காளிகள் மற்றும் உறவினர்களுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு சாமான் வைத்து மரியாதை உடன் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |