குழந்தைகளுக்கு கட்டாயம் பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்கள்
குழந்தைகள் நம்முடைய நாட்டின் கண்கள்.உலகம் சுழலும் ஒவ்வொரு நொடியும் சரித்திரத்தை எழுத கூடிய ஜீவன்களும் அவர்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய உயிர்களும் இறைவன் அருளால் பிறந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படியாக,நாளை என்பது நம் கையில் இல்லை என்றாலும் அன்றைய நாளில் சந்தோஷமாக வாழ மனதில் நல்ல எண்ணமும் இறைநம்பிக்கையும் வேண்டும்.ஆக வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சில முக்கியமான விஷயங்களை ஆன்மீக ரீதியாக சொல்லிக்கொடுக்க பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களுக்கு நாம் அருகில் இல்லை என்றாலும் அவர்களையே அவர்கள் பத்திரமாக பார்த்து கொள்வார்கள்.
அப்படியாக காட்டாயம் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆன்மீக விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
பிள்ளைகள் வளரும் பொழுதே கடவுள் கதைகள் சொல்லி ஊக்குவிக்க வேண்டும்.அந்த கதையில் வரும் அதர்மத்தை அழித்து தர்மம் நிலைநாட்ட இறைவன் வருவார் என்று தீர்க்கமாக புரியவைக்க வேண்டும்.தர்மம் மீறினால் இறைவன் தண்டிப்பார் என்ற உண்மையை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது காட்டாயம் குழந்தைகள் உடன் இருந்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு கூட்டி செல்ல வேண்டும்.
அதே போல்,இறைவனுடைய சிறு சிறு மந்திரங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும்.வாழ்க்கையில் ஏதேனும் துன்பம்,பயம் வரும் பொழுது இந்த மந்திரிங்கள் சொல்ல இறைவன் அருகில் வந்து துணை இருப்பார் என்ற நம்பிக்கை சொல்ல வேண்டும்.
கடவுள் படைப்பால் அனைவரும் சமம் என்ற உண்மை உணர்த்த வேண்டும்.தவறு செய்தல் பெரியவர்களை அவமதித்தால் அதற்கான தண்டனையை கடவுள் கொடுப்பார் என்று போதனை செய்ய வேண்டும்.
முடிந்தால் குழைந்தைகள் வளர வளர அவர்களை சுவாமி நாமங்களை 108 முறை எழுத சொல்லி பழக்குங்கள்.மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் இறைநம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று தைரியம் கொடுங்கள்.
நம்முடைய முன்னோர்கள் பெயர்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.அதே போல் குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் உணர்த்த வேண்டும்.இவ்வாறு சொல்லிக்கொடுத்து வளர்க்க மனதில் அவர்களுக்கு ஆன்மீக சிந்தனை சிறு வயதில் இருந்தே வளரும்.அதே சமயம் அவர்கள் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |