வெள்ளி செவ்வாய் கிழமையில் வீட்டில் கட்டாயம் சமைக்க கூடாதவை
ஆன்மீகத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மிக முக்கியமான நாட்களாக கருதபப்டுகிறது.அது தான் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள்.காலம் காலமாக செவ்வாய் வெள்ளி கிழமைகளில் நாம் சில விஷயங்களை செய்யலாம் செய்யக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர்.
அதாவது செவ்வாய் வெள்ளியில் பூஜை பொருட்களை துலக்க கூடாது என்றும்,வீட்டின் அலமாரிகள் சுத்தம் செய்தல் ஒட்டடை அடித்தல் முடி நகம் வெட்டுதல் போன்ற விஷயங்களை செய்ய கூடாது என்று முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டு நாம் அதை கடைப்பிடித்தும் வருகின்றோம்.
அதே போல் செவ்வாய் வெள்ளி கிழமையில் சில சமையல் செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
செவ்வாய் வெள்ளி கிழமை ஏன் இவ்வளவு முக்கியமான நாளாக படுகிறது என்றால் அது மகாலட்சுமிக்கு உரிய நாளாகும்.ஆதலால் அன்றைய நாளில் மகாலட்சுமிக்கு உரிய துவரம்பருப்பை, இந்த இரு தினங்களிலும் கட்டாயமாக சமைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கடலைப்பருப்பு போட்ட கூட்டு, அப்படி இல்லை என்றால் பாசிப்பருப்பு சேர்த்த சாம்பார் கட்டாயம் வீட்டில் சமைக்கலாம்.
பருப்பு வகை என்பது மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது. அதிகமாக உப்பு, புளி, காரம் சேர்த்த வத்தக்குழம்பு காரக்குழம்பு இவைகளை வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வைப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இதோடு சேர்த்து சிறிதளவு பருப்பு சாதத்துடன் நெய் சேர்த்த உணவை வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் சாப்பிட்டு வருவதன் மூலம் நம்முடைய ஆரோக்கியமும் சீராகும்.
ஆன்மீக ரீதியாக மகாலட்சுமிக்கு உகந்த நெய்யையும் பருப்பையும் நம்முடைய வீட்டில் சமைத்தால் லட்சுமிகடாட்சமும் ஏற்படும்.
முடிந்தவரை துவரம்பருப்பை வேக வைத்து, அந்த பருப்பில் நெய் ஊற்றி சாப்பிடும் பழக்கத்தை மட்டுமாவது வைத்துக்கொள்ளுங்கள்.
புதிய வீடு குடி பொகும் போது கூட, இந்த துவரம்பருப்பிர்க்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் முன்னோர்கள் கடைபிடித்த சொன்ன விஷயங்களில் இதுவும் ஒன்று. நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வந்த பழக்கம்தான். உங்களது வீட்டில் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் பருப்பு சேர்த்த சாப்பாட்டை சமைத்து வரும் பழக்கத்தை கொண்டு வந்தால் வீட்டிலும் மட்டும் அல்லாமல் வாழ்க்கையிலும் சில நாட்களிலேயே ஏற்படும் மாற்றத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும்.
மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற பெரிய பெரிய பூஜைகள் தான் செய்ய வேண்டும். தங்கத்தால் தான் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
அப்படி என்றால் தான் லட்சுமியின்கடைக்கண் பார்வை நம் மேல் விழும் என்பதெல்லாம் இல்லை. இப்படி சிறு சிறு விஷயங்களை வீட்டில் மாற்றி கொண்டு வழிபட்டாலே மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |