இறைவழிபாட்டில் மறந்தும் இந்த ஒரு தவறை செய்து விடாதீர்கள்
இறை வழிபாடு என்பது நம்முடைய வீடுகளில் பூஜை அறைகளில் விளக்கேற்றி சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து நமக்கு தேவையானதை பிரார்த்தனை செய்து கொள்ளும் வழிபாடு மட்டுமல்ல. இறை வழிபாடு உண்மையில் எவ்வாறு இருக்க வேண்டும்? நாம் படிக்கக் கூடிய புராணங்களாக இருக்கட்டும், நாம் படிக்கக்கூடிய திருமுறை மந்திரங்களாக இருக்கட்டும், திருப்பாவை பாசுரமாக இருந்தாலும் இறை வழிபாடு உண்மையில் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.
கடவுளை உணர்தல் என்பது நம்முடைய ஆன்மாவை மேன்மைப்படுத்த கூடிய ஒரு அற்புதமான விஷயம்தான. அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஆனால் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நம்முடைய வேண்டுதலை வைத்து இறைவனை உணர்தலோடு மட்டுமே அவை முடிந்து விடக்கூடாது.
இறைவனை உணர்கிறோம், புராணங்களை படிக்கின்றோம், திருமந்திரங்கள் திருவாசகம் பாராயணம் செய்கிறோம் என்றால் அவை நமக்கு மட்டும் நன்மை சேரக்கூடிய ஒரு சுயநலமான விஷயமாக இருக்கக் கூடாது.
இறை வழிபாட்டால் நம் வாழ்க்கையில் நன்மைகள் நடந்தாலும். இறைவழிபாட்டால் நாம் மேன்மை அடைந்து நம்முடைய குணங்கள் நல்லவிதமாக மாறப்பெற்றாலும், நம்முடைய மாறுதல்கள் நம்முடைய சுற்றத்தையும் நம்முடைய சமுதாயத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.
இதில் தான் இறை வழிபாடு நிறைவு பெறுகிறது. இதில் தான் நாம் பாராயணம் செய்கின்ற மந்திரங்கள் உயிர்பெறுகிறது. அசுர குலத்தில் பிறந்த பிரகலாதன் பகவான் விஷ்ணு என்னையும் ஏற்றுக்கொண்டு அருள் புரிவார் என்று அசுரர்களுக்கு இடையே பகவானின் மகிமையையும் பகவானின் நாமம் சொன்னால் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அற்புதத்தை எடுத்துரைத்தார்.
அதாவது அசுரர்களாக பிறந்திருந்தாலும் அவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை பகவான் வழியாக அவன் போதனை செய்தான். நம்முடைய பக்தியும் இறைவழிபாடும் இவ்வாறு தான் இருக்க வேண்டும்.
பக்தியும் இறை வழிபாடும் மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும் மனிதர்கள் வெவ்வேறு அல்ல என்று உணரச் செய்தல் வேண்டும். ஒவ்வொரு மனிதன் மனதிலும் நல்ல எண்ணத்தை விதைக்கும் ஒரு விதையாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







