இந்த தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாதாம்.. என்ன தெரியுமா?
மனிதர்களுடைய வாழ்வே எவ்வளவு இக்கட்டான நிலையிலும் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்தலில் இருக்கிறது. அந்த வகையில் மனிதர்களுக்கு பல வகையான குணங்கள் இருந்தாலும் அதில் மிகக் கொடுமையான மற்றும் அவர்களுக்கு எதிர்காலத்தில் துன்பத்தை கொடுக்கக்கூடிய குணமாக பேராசை இருக்கிறது.
இந்த ஆசை வந்துவிட்டால் மனிதர்களுடைய கண்களை மூடிவிடும். பிறகு செய்யக்கூடாத தவறுகளை செய்து பிற்காலங்களில் அவர்கள் அழிவை சந்தித்துக் கொள்கிறார்கள். அப்படியாக மனிதர்கள் தவறியும் வாழ்க்கையில் பிறருடைய சொத்துக்களுக்கு ஆசைப்படக்கூடாது.
அதிலும் குறிப்பாக இவர்களுடைய சொத்துகளுக்கு ஆசைப்பட்டால் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அழிவை சந்திக்க கூடும் என்று சொல்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.

1. ஒருவர் சிவன் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது. அது குல நாசத்தை உண்டு செய்யும்.
2. அதை போல் பங்காளிகள் சொத்துக்கும் ஆசைப்பட்டு நாம் அபகரிக்க கூடாது. அது நம்ம வம்ச அழிவை உண்டு செய்யும்.
3. பிராமணர்களின் சொத்துக்களை அபகரிக்க கூடாது. மிகப்பெரிய சாபத்திற்கு ஆளாகி விடுவோம்.
4. கோவில் சொத்துக்கு ஆசைப்பட்டு அபகரிக்கக் கூடாது. நாம் மிகுந்த துன்பத்தை அனுபவித்து மரணிக்க நேரும்.

5. கருமிகளின் சொத்துகளுக்கு ஆசைப்படக்கூடாது. நாம் ஒன்றும் இல்லாமல் போய்விடுவோம்.
6. ஒருவருக்கு வாரிசு இல்லை என்றால் அவர்களுடைய சொத்துக்கு ஆசைப்படக்கூடாது. நம்முடைய வம்சம் நிலைக்காது.
7. ஏழைகளின் சொத்தை அபகரிக்கக் கூடாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நமக்கு மன்னிப்பு கிடையாது.
ஆக, மனிதனுடைய ஆசை என்பது அந்த நேரத்தில் அவர்களுக்கு இனிமையாக இருக்கும். ஆனால் காலம் கடந்து அவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தை கொடுத்து விடும். நாம் யாருடைய பொருட்களுக்கும் ஆசை கொள்ளாமல் இருப்பதை வைத்து வாழப்பழகும் பொழுது இறைவனுடைய அருளால் எதிர்பாராத செல்வம் நம்மை வந்து சேரும். அதை மீறி அபகரிக்கும் பொழுது அழிவை சந்திக்கின்றோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |