கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

By Yashini Nov 04, 2024 07:35 AM GMT
Report

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.

இரண்டாம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

பின் 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் | Thiruchendur Kandha Sashti Festival

தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார்.அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.

அப்போது அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் | Thiruchendur Kandha Sashti Festival

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதினம் கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளிகிறார்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

இரவு சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US