திருமணமாக வேண்டுமென்று பார்வதி தேவியே சென்று வழிபட்ட திருத்தலம்

By Yashini Apr 27, 2024 07:09 AM GMT
Report

நவ கிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில், ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டுமென்றால் குருவின் பார்வை வேண்டும்.

திருமணமாக வேண்டுமென்று பார்வதி தேவியே சென்று வழிபட்ட திருத்தலம் | Thirumanam Nadakka Parvathi Deviye Sendra Thalam

குரு பகவானின் அருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம் என்று புராணமும் தெரிவிக்கிறது.

அந்தவகையில், பார்வதிதேவி சிவனாரை மணம் புரிய வேண்டி, குரு பார்வை வேண்டும் என்று திட்டை எனும் திருத்தலத்துக்கு வந்தாள்.

தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திட்டை திருத்தலம் குரு பகவானுக்கு உகந்த தலமாகும். 

திருமணமாக வேண்டுமென்று பார்வதி தேவியே சென்று வழிபட்ட திருத்தலம் | Thirumanam Nadakka Parvathi Deviye Sendra Thalam

இங்கு குருவை மனதார நினைத்து தவம் புரிந்தாள். இதன் பலனாக குருவின் பார்வை கிடைத்து சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என்று புராணம் விவரிக்கிறது. 

இதனால், திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

அதேபோல், வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வர விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US