திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய பொதுவான குணங்கள் என்ன?
ஜோதிட ரீதியாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய பொதுவான குணங்கள் என்னவென்று பார்ப்போம். திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். ராசி மிதுனம் மற்றும் தெய்வம் ருத்ரன் சிவபெருமானின் ஒரு வடிவம் ஆகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல புத்திசாலியாகவும், பேசுவதில் வல்லவராகவும் இருக்கக் கூடியவர்கள். குறிப்பாக மிகவும் தந்திரமாக பேசி ஒரு காரியத்தை முடித்துக் கொள்வார்கள். நல்ல அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எல்லோருக்கும் நல்லவர்களாகவே தெரியக்கூடியவர்கள். பிறருக்கு உதவக்கூடிய மனப்பான்மை அதிகம் இருக்கும். நிறைய பெயர் புகழை வாங்குவார்கள். எளிதில் பழகக் கூடியவராகவும் இருப்பார். நல்ல குணங்கள் இருக்கும்.
ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்பக் கூடியவர்கள். கணக்கில் சாமர்த்திய சாலிகளாகவும் இருப்பார்கள். இருப்பினும், ஒரு முரட்டு சுபாவம் இருப்பதை நாம் பார்க்கலாம்.
அதை போல், பிடிவாத குணம் இவர்களிடத்தில் அதிகம் இருக்கும். கடுமையாக உழைத்து முன்னேற கூடியவர்கள். அவ்வப்போது உறவினர்களிடம் பகையை வளர்த்துக் கொள்வார்கள்.
சற்று சுயநலம் இவர்களிடத்தில் காணப்படும். நிறைய இடங்களில் நிதானத்தை இழந்து காணப்படுவார்கள். சமயங்களில் திமிரான பேச்சுக்களும் பார்க்கலாம்.
நிறைய ரகசியம் வைத்துக் கொள்ளக்கூடிய நபராக இருப்பார்கள். புகழை விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள். எழுதுவதில் அதிக விருப்பம் இருக்கும். விவேகானமான முயற்சிகளை உடையவர்களாக இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |