சூரியபகவானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள்- எதிலும் நம்பர் 1 ஆக இருப்பார்களாம்
ஜோதிடத்தில் சூரிய பகவான் தலைமை கிரகமாக இருக்கிறார். இவர் தான் தந்தையை குறிக்கக்கூடிய கிரகமாகவும், அவர்தான் ஒரு மனிதன் சமுதாயத்தில் செல்வாக்கோடும் ஆளுமையோடும் வாழக்கூடிய தன்மையை குறிக்கக் கூடியவராக இருக்கிறார்.
அப்படியாக சூரிய பகவானுடைய அருள் ஒரு மனிதருக்கு கிடைத்துவிட்டது என்றால் அவர் மிகப்பெரிய இடத்தில் அமர்ந்து விடுவார்கள். அப்படியாக ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு குறிப்பிட்ட மூன்று ராசிகள் மிகவும் பிடித்தமான ராசிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு சூரிய பகவானுடைய அருள் எப்பொழுதும் இருக்குமாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மேஷ ராசியினருக்கு சூரிய பகவானின் அருள் எப்பொழுதும் இருக்கும். மேஷ ராசியில் பிறந்த நபர்கள் தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்குவார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு பொறுப்பாக இருந்தாலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய இடத்தில் இவர்களை சூரியபகவான் அமர்த்தி விடுவார். மேலும் மேஷ ராசியில் பிறந்த அன்பர்கள் சிறுவயதிலே மிகப்பெரிய ஆளுமை பண்போடு தொழிலிடங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருப்பதை நாம் பார்க்க முடியும்.
சிம்மம்:
சூரிய பகவானுடைய சொந்த வீடான சிம்ம ராசியினருக்கு பிறவியிலே பெரிய அளவில் ஒரு தலைமைத்துவை பண்பு இருப்பதை காணமுடியும். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சமுதாயத்தில் எப்பொழுதும் மிகப்பெரிய அளவில் தங்களுக்கு பெயரும் புகழும் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள். அது மட்டும் அல்லாமல் உழைப்பிற்கு பெயர் போனவர்கள் இந்த சிம்ம ராசியினர். இவர்களுடைய தீராத உழைப்பாலும் சூரிய பகவானின் அருளாலும் சிம்ம ராசியினர் தங்களுடைய வாழ்க்கையில் அவர்கள் நினைத்த இடத்தை அடைந்து விடுவார்கள்.
தனுசு:
குரு பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற தனுசு ராசியினர் ஒருவரை வழி நடத்துவதில் மிகச்சிறந்தவர்களாக இருப்பார்கள். தனுசு ராசியினர் இருக்கும் இடத்தில் கட்டாயமாக செல்வ செழிப்பான சூழலை நாம் காணலாம். இதற்கு ஒரு முக்கிய காரணம் சூரிய பகவானுடைய அருள் தான். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய பகவானின் அருள் எப்பொழுதும் இருப்பதால் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எப்படியாவது ஒரு மிகச்சிறந்த இடத்தை அடைந்து செல்வாக்கோடு வாழ்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |