இந்த 3 ராசிகளிடம் நண்பர்களாக இருப்பது மிகவும் கஷ்டமாம்- யார் தெரியுமா?
மனிதர்களாகிய எல்லாருக்கும் கட்டாயமாக நண்பர்கள் அவசியம். அப்படியாக இந்த நட்பானது எல்லாருக்கும் நன்றாக அமைந்து விடுவதில்லை. சிலர் நட்பினால் கூட துரோகம் சந்தித்து விடுகிறார்கள்.
ஒரு சிலருக்கு நட்புகள் நீண்ட நாட்கள் உடன் இருந்து பயணம் செய்து அவர்கள் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் நிற்கிறார்கள். அப்படியாக குறிப்பிட்ட சிலர் ராசியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வட்டம் மிகவும் குறைவாக இருப்பார்களாம். அதுமட்டுமல்லாமல் இவர்களிடம் நண்பர்களாக இருப்பதே மிகவும் கடினம் என்று சொல்கிறார்கள். அவர்கள் யார்? எந்த ராசியினர் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசி பொருத்தவரை அவர்கள் மிகவும் சுயநலமான நபர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் தனக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கக்கூடிய நபர் என்பதால் இவர்களுடன் நட்பாக பழகக் கூடியவர்களுக்கு இவர்கள் சில நேரங்களில் மரியாதை செலுத்தாத நிலை உருவாகிறது. அதாவது இவர்களுடைய நண்பர்கள் இவர்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் இவர்கள் அந்த நட்புகளிடம் அவ்வாறு இருப்பதில்லை. ஆதலால் மிதுன ராசியினருக்கு நட்பு வட்டாரம் எப்பொழுதும் ஒரு சிறிய அளவிலே தான் இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியினர் எப்பொழுதும் எதையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் நட்பாக இருந்தாலும் அந்த நட்புகளிடமும் இவர்கள் ஏதேனும் குறை சுட்டி காண்பித்து அதை நீண்ட நாள் பயணமாக தொடர விடாமல் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் கன்னி ராசியினரிடம் நாம் எவ்வளவுதான் நெருங்கி பழகினாலும் அவர்கள் நம்மிடம் நெருங்காத ஒரு நிலையை தான் நம் காண முடியும். மேலும் கன்னி ராசியினர் பொறுத்தவரை இவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விடுவார்கள். ஆதலால் நட்பு என்பதற்கு அதிக அளவில் இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
மகரம்:
மகர ராசியினர் சற்று முன் கோபக்காரர்கள் என்று சொல்லலாம். ஆதலால் இவர்கள் என்னதான் மனதிற்குள் அதிக அளவிலான அன்பு வைத்திருந்தாலும் சமயங்களில் இவர்களுடைய கோபத்தினால் இவர்களுடைய உறவுகள் முறிந்து போகக்கூடிய நிலை வருகிறது. இவர்களுக்காக இவர்களுடைய நட்பு நல்லதை செய்திருந்தாலும் அதை பார்க்க தவறி விடுவதால் இவர்களுடன் நட்பு வைத்துக் கொள்வதில் நிறைய சிரமங்களை நாம் சந்திக்கின்றோம். ஆக மகர ராசினரிடம் நட்பாக பழகுவதில் நிறைய சிரமங்கள் இருக்கிறது. ஆதலால் இவர்களுக்கும் நட்பு வட்டாரம் என்பது மிகவும் குறைவாக தான் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |