இந்த இரண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக வாழ்வார்களாம்
ஜோதிடம் பல நேரங்களில் நம்முடைய வழிகாட்டியாகவே இருக்கிறது. அப்படியாக ஜோதிடத்தில் திருமண பொருத்தம் என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் 12 ராசிகளில் எந்த இரண்டு ராசிகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுடைய வாழ்க்கை மிக அமோகமாக இருக்கும் என்று பார்ப்போம்.

1.மேஷம் மற்றும் துலாம்:
மேஷம் மற்றும் துலாம் ராசியினர் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். மேஷ ராசியினர் எளிதாக கோபப்படக் கூடியவர்கள்.
ஆனால் துலாம் ராசியினர் தன்மையை விரும்பக் கூடியவர்கள். அதனால் மேஷ ராசியினர் கோபம் கொள்ளும் பொழுது துலாம் ராசியினர் சமாதானம் செய்து நல்ல புரிதலோடு வாழ்க்கையை வாழ்வார்கள்.
2. ரிஷபம் மற்றும் கடகம்:
ரிஷபம் மற்றும் கடக ராசியினர் திருமணம் செய்து கொள்ளும் பொழுது உணர்வு ரீதியாக மிகுந்த பாதுகாப்பாக உணர்கிறார்கள். ரிஷப ராசியினர் நிலைத்தன்மை விரும்பக் கூடியவர்கள். கடக ராசியினர் அதீத அக்கறை செலுத்துபவர்கள். இருவரும் சேரும் பொழுது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

3. மிதுனம் மற்றும் கும்பம்:
மிதுனம் மற்றும் கும்ப ராசியினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். இதில் ஒருவர் மனதில் நினைக்கக் கூடியதை மற்றொருவர் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய அமைப்பு இருப்பதால் இருவரும் திருமணம் செய்யும் பொழுது அவர்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக அமைகிறது.
4. கன்னி மற்றும் மகரம்:
கன்னி மற்றும் மகர ராசியினர் ஒரு சிறந்த வாழ்க்கை துணை என்றே சொல்லலாம். கன்னி ராசியினர் அதிக அளவில் அக்கறை செலுத்துபவர்கள். மகர ராசியினர் ஒழுக்கத்தை விரும்பக் கூடியவர்கள். மேலும் இவர்கள் இருவரும் சேரும் பொழுது எதிர்கால வாழ்க்கைக்கு தேவையானதை இவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொண்டு ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள்.
5. விருச்சிகம் மற்றும் மீனம்:
விருச்சிகம் மற்றும் மீன ராசியினர் எண்ண அலைகள் ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் இவர்கள் இருவரையும் புரிந்து கொள்வது மிக எளிதானதாகவும் அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்துவதற்கு சுலபமாகவும் அமைந்துவிடுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |