நாளைய ராசி பலன்(02-01-2026)
மேஷம்:
மனதளவில் இன்று புத்துணர்ச்சியாக உணருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாக கூடிய நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.
ரிஷபம்:
இன்று உங்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றக்கூடிய அற்புதமான நாள். குடும்ப உறுப்பினர் உங்களுக்கு எதிர்பாராத விதமாக ஒரு நல்ல ஆதரவு தெரிவிப்பார்கள். தங்கம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள்.
மிதுனம்:
இன்று கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பாராட்டுக்களும் வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லுங்கள். தொழில் ரீதியாக கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
இன்று வெளியூர் பயணங்கள் செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலர் தான தர்மங்கள் போன்ற புண்ணிய காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் உண்டாகும்.
சிம்மம்:
மாணவர்கள் கல்விகள் என்று சிறந்து விளங்குவார்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி:
இன்று உங்கள் செயல்பாடுகளில் ஒரு சில பதட்டங்கள் உருவாகலாம். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு வருவதற்கு தாமதமாகலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள்.
துலாம்:
இன்று பொது காரியங்களில் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள் சந்தித்த பிரச்சனை நல்ல முடிவை தரும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு வரவுக்கேற்ற செலவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் சரியாக கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகி மறையும் நாள்.
தனுசு:
இன்று இவர்களுக்கு உடல் சோர்வு அதிக அளவில் வரலாம். நான் எதையும் தீர ஆலோசித்து முடிவெடுத்தால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
மகரம்:
இன்று தேவையில்லாத வம்பு வழக்குகளை சிக்கிக் கொள்ளாதீர்கள். மனதில் ஏற்படுகின்ற குழப்பங்களை சரி செய்வதற்கு தியானத்தில் ஈடுபடுங்கள். பொருளாதாரத்தில் சிக்கனம் தேவை.
கும்பம்:
நண்பர்கள் வழியாக உங்களுக்கு எதிர்பாராத செய்தி வந்து சேரலாம். பெற்றோர்களுடைய உடல் நிலையில் கவனம் வேண்டும். மாலை மேல் ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.
மீனம்:
இன்று மனதில் மீன் குழப்பங்களும் சிந்தனைகளும் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பொருளாதார ரீதியாக சந்தித்த சிக்கல் எல்லாம் விலகி நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |