இன்றைய ராசி பலன் (13-01-2026)
மேஷம்:
உங்கள் வீடுகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சில முக்கியமான விஷயங்களை செய்வீர்கள். வேலையில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
குடும்பத்தில் அமைதி காப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். முடிந்த வரை இன்று எல்லா இடங்களிலும் பக்குவமாக இருந்து விட்டால் பிரச்சனை விலகும்.
மிதுனம்:
வேலை பளு அதிகரிக்கும் நாள். உங்களின் நெருங்கிய சொந்தங்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கும் நாள்.
கடகம்:
தொழில் ரீதியாக கவனம் செலுத்துங்கள். தேவை இல்லாமல் யாரிடமும் உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். திடீர் மருத்துவ செலவு சிலருக்கு வர வாய்ப்புகள் உள்ளது.
சிம்மம்:
கடன் வாங்குவதை கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஒருவருக்கு வாக்குறுதிகள் கொடுக்கும் முன் பல முறை ஆலோசனை செய்து கொடுங்கள். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும்.
கன்னி:
திருமண தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். தாய் மாமன் வழி உறவுகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். மனதில் நீண்ட நாட்களுக்கு பிறருக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
இன்று சில உண்மையானவரின் முகத்தை புரிந்து கொள்ளுங்கள். வேலையில் அதிக கவனம் செலுத்தும் நாள். உடல் நலனில் சற்று அக்கறை காட்டுவதும் அவசியம். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.
விருச்சிகம்:
தெரியாத நபர்களின் உதவி பெறுவீர்கள். சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியான நேரம் செலவு செய்யும் சூழல் உண்டாகும். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
தனுசு:
பிள்ளைகளுடன் சண்டை மற்றும் மன குழப்பங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். மனதில் பல யோசனை வந்து செல்லும். உங்களுக்காக நேரம் செலவிடும் நாள்.
மகரம்:
வேலை ரீதியாக உயர் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் வர வாய்ப்புகள் உள்ளது. முடிந்த வரை நீங்கள் பொறுமையாக இருந்தால் பிரச்சனை சமாளிக்கலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கும்பம்:
வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான மற்றும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். வெளியூர் செல்லும் பொழுது நீங்கள் வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இறைவழிபாடு கைகொடுக்கும்.
மீனம்:
நண்பர்கள் வழியாக சில குழப்பங்களும் பிரச்சனைகளும் வரலாம். உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவுகள் வரலாம். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |