நாளைய ராசி பலன் (24-04-2026)
மேஷம்:
இன்று தொழில் ரீதியாக குழப்பம் தோன்றி மறையும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையலாம். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தொழில் வாழ்க்கையில் இன்று முக்கியமான முடிவு எடுக்கும் நாள். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத்தினர் ஆறுதல் பெறுவீர்கள்.
மிதுனம்:
இன்று தேவை இல்லாத வாக்குவாதங்களை அலுவலகத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். அரசியல் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
கடகம்:
தாய் வழி உறவுகளால் இருந்து வந்த சிக்கல் விலகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்யுங்கள். திருமணம் தொடர்பான பேச்சுக்களில் இருந்து வந்த பிரச்சனை விலகும் நாள்.
சிம்மம்:
உங்கள் வீடுகளுக்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகளில் இருந்த தடைகள் விலகும். நன்மையான நாள்.
கன்னி:
எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கும். குடும்பத்தில் சொந்தங்கள் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
துலாம்:
வேலை பளு அதிகரிக்கும். உடல் சோர்வு மனசோர்வு உண்டாகலாம். ஒரு சிலர் உங்களை புரிந்து நடந்துக் கொள்ளாமல் போகலாம். மனதை தெளிவாக வைத்துக்கொள்ள தியானம் செய்யுங்கள்.
விருச்சிகம்:
இன்று போட்டி பொறாமைகள் தவிர்ப்பதை நல்லது. தேவை இல்லாத விஷயங்கள் நினைத்து மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
தனுசு:
இன்று மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். சொந்தங்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் சந்தித்த பிரச்சனை விலகும் நாள்.
மகரம்:
உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தந்ததையுடன் தேவை இல்லாத வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் வீண் கோபம் தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
சிலருக்கு தேவை இல்லாத மனக்கசப்புகள் வரலாம். உடன் இருப்பவர்களை நன்கு புரிந்து நடந்துக் கொள்வீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை செய்யவேண்டும்.
மீனம்:
இன்று பிள்ளைகள் விஷயங்களில் கவனமாக இருங்கள். முடிந்த வரை நேர்மையாக சிந்தித்து செயல்படுங்கள். மனக்கவலைகள் விலக தியானம் செய்யுங்கள். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |