நாளைய ராசி பலன் (05-02-2026)
மேஷம் :
உங்களுக்கு இன்றைய நாளில் புதிய வாழ்க்கை அனுபவங்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். நீண்ட நாள் பண பிரச்சனை விலகும். நன்மையான நாள்.
ரிஷபம் :
பிறரிடம் பேசும் பொழுது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வீடுகளில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் :
முகம் தெரியாத நபர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத பேச்சு வார்த்தைகள் வைத்து கொள்ளாதீர்கள். வேலை பளு அதிகரிக்கும்.
கடகம் :
உங்களுக்கு எதிராக சென்றவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். வாழ்க்கை துணையிடம் இருந்த கசப்புகள் விலகும்.
சிம்மம் :
வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி யோசிப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். எதையும் பல முறை ஆலோசனை செய்து முடிவு எடுங்கள்.
கன்னி :
மாணவர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களால் இருந்த பிரச்சனைகள் விலகும். ஒரு சிலருக்கு சொந்தங்கள் மிகவும் ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருப்பார்கள்.
துலாம் :
இன்று மனதில் எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். உங்களுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த பிரச்சனை விலகும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
விருச்சிகம் :
குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். கல்வியில் மாணவர்கள் சிறந்த விளங்குவார்கள். வாழ்க்கை துணையிடம் இருந்த மன கசப்புகள் விலகும். நன்மையான நாள்.
தனுசு :
வீட்டில் உள்ளவர்களிடம் சற்று நிதானமாக இருக்க வேண்டும். புதிய நட்புகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். கடன் பிரச்சனை விலகும் நாள்.
மகரம் :
இன்று தலை சிறந்து விளங்கும் நாள். உடன் பிறைந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பேச்சு திறன் வெளிப்படும். கலை துறையில் சிறந்து விளங்குவீர்கள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம் :
வழக்கு விஷயங்களில் உங்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை உண்டாகும். பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். குழந்தைகள் வழியே உங்களுக்கு பெருமை கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |