இன்றைய ராசி பலன் (01-09-2026)
மேஷம்:
இன்று தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். உடன் பிறந்தவர்வர்களின் வாழ்க்கையில் இருந்த சில குழப்பம் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்:
இன்று நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும்.
மிதுனம்:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பங்களில் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்:
இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி:
மனதில் தேவை இல்லாத பயமும் பதட்டமும் உண்டாகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
துலாம்:
மனதில் நம்பிக்கையும் தெளிவும் பிறக்கும். உங்களுக்கு நண்பர்களும் உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று துணை வழி சொந்தங்களால் ஆறுதலை பெறுவீர்கள். தாய்மாமன் வழி உறவில் இருந்த சிக்கல் விலகும். முன்னேற்றமான நாள்.
தனுசு:
பிள்ளைகளைப் பற்றி பெருமை அடைவீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சேமிப்பு பற்றிய எண்ணம் உயரும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
மகரம்:
இன்று நெருங்கியவர்களுக்காக முக்கியமான விஷயங்களை செய்வீர்கள். எதிர்பாராத பணவரவுகள் உங்களைத் தேடி வரும். நன்மையான நாள்.
கும்பம்:
வழக்கு விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை ரீதியாக திடீர் வெளியூர் பயணம் செல்வீர்கள். குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.
மீனம்:
இன்று சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத நற்செய்தி வந்து சேரும். விலகி சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். நன்மையான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |