இன்றைய ராசி பலன்(10.11.2024)
மேஷம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.முயற்சி வெற்றியாகும். மனதில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயமாகும்.புதிய நண்பர்கள் அறிமுகத்தால் உற்சாகம் பெறுவீர்கள்.
ரிஷபம்
தொழில் முன்னேற்றம் அடையும். சிலர் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.போட்டிகளை சமாளித்து நீங்கள் மேற்கொண்ட வேலையில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
இறை வழிபாட்டில் பங்கேற்பீர். தந்தை வழி உறவுகளின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வர வேண்டிய பணம் வரும்.
கடகம்
நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.பயணத்தில் கவனம் தேவை.உங்கள் வியாபார ரகசியங்களை தெரிந்து கொள்ள சிலர் முயற்சிப்பர்.பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேசவேண்டும்.
சிம்மம்
வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.பெற்றோர்கள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.
கன்னி
எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் சில சிக்கல்கள் உருவாகலாம்.செய்த தவறை நினைத்து மனம் வருந்துவீர்கள்.வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.வருமானம் உயரும்.
துலாம்
எதிர்பார்த்த பண வரவால் சந்தோசம் அடைவீர்கள்.வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்.தொழில் புரியும் இடத்தில் சாமர்த்தியமாக செயல்படுவீர்.அலுவலகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.
விருச்சிகம்
சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.இழுபறியாக இருந்த வேலையை கையில் எடுத்து வெற்றி காண்பீர். நிதிநிலை உயரும்.
தனுசு
உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.மன அமைதிக்காக கோயிலுக்கு சென்று வருவீர்கள்.வீட்டில் சில பிரச்சனைகள் தோன்றலாம்.நிதானமாக இருப்பது அவசியம்.
மகரம்
வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி யோசிப்பீர்கள்.உங்கள் திறமையான பேச்சால் நினைத்ததை முடிப்பீர்கள்.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
கும்பம்
உங்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த நாள் அமைய வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நல்லது.பல நினைவுகள் உங்களை மன வருத்தத்திற்கு ஆளாக்கும்.பிறரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
மீனம்
மறைமுக எதிரிகளால் சில வருத்தங்கள் உண்டாகும்.பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.இன்று இயல்பான வேலைகளிலும் சில நெருக்கடிகள் உண்டாகும்.இன்று எந்த புதிய முயற்சியும் எடுக்க வேண்டாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |