Report

மேஷம்

பரணி, கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. 

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்த வண்ணம் இருக்கும். வியாபாரிகளிடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவர். எதிர்பார்த்தது தங்களுக்கு கிடைக்கும். சின்னத்திரை கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் மேம்படும். 

மிதுனம்

மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. விரும்பியவரை தேடிச்சென்று சந்தித்து மகிழ்வீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும். 

கடகம்

பிரச்சினைகள் எளிதில் தீரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வீட்டில் அமைதி நிலவும். தேகம் பலம் பெறும். மாணவர்களது திறமை பளிச்சிடும். காதலர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள். 

சிம்மம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம். சிக்கனம் தேவை. உத்யோகஸ்தர்கள் பணியிடத்தில் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். 

கன்னி

வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். மனதில் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் சரளமாகும். கலைஞர்களின் புகழ் ஓங்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். எடுத்த காரியங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கணவன்–மனைவி உறவு நிலை சீராக இருந்து வரும். 

துலாம்

அலுவலகப் பணியாளர்களின் எண்ணங்கள் நிறைவேறும். கலைஞர்களுக்கு கற்பனை வளம் பெருகும். உடன் பிறப்புகள் உதவுவர். நினைத்த காரியங்கள் அனுகூலமாகும். வேற்று மொழி சார்ந்தவர்கள் உதவுவர்.

விருச்சிகம்

வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.மன தைரியம் பிறக்கும். கணவர் பக்கபலமாய் இருந்து வருவார்கள். வியாபாரிகளுக்கு அனுகூலமானப் போக்கு தென்படும். பணம் பல வழியில் வந்து சேரும். விவசாயிகள் ஏற்றம் அடைவர். 

தனுசு

உறவினர் பக்கபலமுடன் இருப்பர். தேகம் பளிச்சிடும். பணப்புழக்கம் திருப்தி தரும். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். வீடு மனையால் லாபம் வரும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கும். உடன் பிறப்புகள் உதவுவர். 

மகரம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.உடல் நலம் பலம் பெறும். நட்பால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 

கும்பம்

வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த காரியம் வெற்றியைத் தரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் விலகிப் போவர். மற்றவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உடல்நிலை சரியாகும். 

மீனம்  

பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்து வரும். கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர்.விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். அலுவலகப் பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள். உணவில் எச்சரிக்கை தேவை.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US