இன்றைய ராசிபலன் - 07.06.2025

By Fathima Jun 07, 2025 02:44 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, புதிய முயற்சிகள் கைகூடி வரும், நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் நாள் இன்றாகும், பெற்ற தாயை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள், பதவி உயர்வு உண்டு.

ரிஷபம்

இன்று உற்சாகமான நாள், பதவி உயர்வு குறித்த செய்திகள் வந்துசேரும், எதிர்பார்த்த பணவரவு உண்டு, எனினும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம், அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வியாபாரத்தில் கூடுதல் வருமானம் பெறுவீர்கள்.

கடகம்

இன்று மகிழ்ச்சியான நாள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும், அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.

சிம்மம்

இன்று சிறிது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள், புதிய முயற்சிகள் எதையும் தொடங்க வேண்டாம், எதிர்பாராத செலவுகள் வரலாம், பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கலாம்.

கன்னி

அரசாங்க அதிகாரிகளால் நல்ல செய்திகள் வந்து சேரும், உத்யோகத்தில் நீங்கள் விரும்பும்படியான செயல்கள் நடைபெறும், தந்தைவழி உறவுகளால் பணம் வந்து சேரலாம்.

துலாம்

இன்று பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் நாள், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள், சொந்த நிலம் வாங்க காரியங்கள் கைகூடி வரலாம்.

விருச்சிகம்

இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள், மற்றவர்களுடன் பேசுவதில் கவனம் தேவை, சிறு சிறு தடைகள் இருந்தாலும் பெரியளவில் பாதிப்பு ஏதும் இருக்காது, மாணவர்களின் கல்வியின் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு

இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள், நிதானத்துடன் செயல்படுங்கள், குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, பணம் கிடைப்பதில் தாமதம் இருக்கலாம்.

மகரம்

இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள், புதிய வருமானம் கைகூடி வரும், தொழில் ரீதியான முன்னேற்றம் உண்டு, சக வியாபாரிகளுடனான தொல்லைகள் நீங்கும்.

கும்பம்

இன்று தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கம், புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம், குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படலாம், வியாபாரத்தில் லாபம் உண்டு.

மீனம்

வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள் இன்றாகும், அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திடுங்கள், தேவையற்ற மனக்குழப்பங்கள் மற்றும் சங்கடங்கள் தோன்றலாம்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US