இன்றைய ராசி பலன் (28.07.2024)

Report
மேஷம்

செய்யும் வேலையில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.செயல்களில் அனுகூலம் உண்டாகும்.பிறருடைய விவகாரங்களில் ஈடுபட்டுவதை தவிர்க்கவும்.

ரிஷபம்

திடீர் என்று எதிர்பாராத செலவுகள் தோன்றும்.மனதில் உள்ள எண்ணங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் பிரச்னை முடிவிற்கு வரும்.

மிதுனம்

வியாபாரத்தில் நேரடியாக கவனம் செலுத்துவீர்கள்.தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.தொழிலில் கவனமாக செயல்படுவதால் முயற்சியில் லாபம் காண முடியும்.

கடகம்

எதிலும் போராடி வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி லாபம் அடைவீர்.தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

எடுக்கும் முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். முன்னோர் வழிபாட்டால் நன்மைகள் அடையும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பெரியவர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

எதையும் பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சிகளில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகலாம்.அலைச்சல் அதிகரிக்கும்.எதிர்பாராத மனவருத்தத்தை சந்திக்கக்கூடும்.

வீடு கட்டுபவர்கள் அவசியம் அறிய வேண்டிய வாஸ்து தகவல்கள்

வீடு கட்டுபவர்கள் அவசியம் அறிய வேண்டிய வாஸ்து தகவல்கள்


துலாம்

நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை.அறிவு பூர்வமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர்கள் .இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.மற்றவரால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு

குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அமைதி காப்பது நல்லது.உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும்.

மகரம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் உருவெடுக்கும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்

செயல்களில் எதிர்ப்பை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்னை இன்று முடியும்.உடல்நிலையில் எதிர்பாராத தொந்தரவுகள் உருவாகும்.

மீனம்

உழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US