நாளைய ராசி பலன் (02-05-2026)

Report

மேஷம்:

நேற்று வரை மனதில் இருந்து குழப்பங்கள் இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவுகள் வரலாம். முடிந்த வரை யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில சங்கடம் வரலாம்.

ரிஷபம்:

தொழில் ரீதியாக நீங்கள் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரலாம்.

மிதுனம்:

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலம் ஆகும். உங்கள் வருமானத்தை உயர்த்தும் வேலையில் ஈடுபடுவீர்கள்.

கடகம்:

மன ரீதியாக உங்களுக்கு சில குழப்பங்கள் வந்து செல்லும். தொழில் ரீதியாக உங்களுக்கு முக்கிய நபரின் சந்திப்புகள் கிடைக்கலாம். அரசியல் ரீதியாக இருந்த வந்த பிரச்சனை விலகும்.

உங்களுக்கான கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் தேவதை எண் என்ன தெரியுமா?

உங்களுக்கான கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் தேவதை எண் என்ன தெரியுமா?

 

சிம்மம்:

உங்கள் வீடுகளில் இருந்து வந்த மன குழப்பங்கள் விலகும். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவீர்கள். விவசாயம் செய்யும் நபர்களுக்கு முக்கியமான நாளாக அமைய போகிறது.

கன்னி:

சிலருக்கு தொலை தூரம் பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வருமானம் உயரும் நாள்.

துலாம்:

வீடுகளில் உங்களுக்கு மதிப்பு உயரும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகலாம்.

விருச்சிகம்:

நணபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். உங்கள் ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும் நாள்.

2026: மே மாதம் என்ன நடக்கப்போகிறது? பிரபஞ்சம் சொல்லும் செய்தி என்ன?

2026: மே மாதம் என்ன நடக்கப்போகிறது? பிரபஞ்சம் சொல்லும் செய்தி என்ன?

தனுசு:

குழந்தைகள் ஆரோக்கியத்தில் நீங்கள் முழுமையமான கவனம் செலுத்த வேண்டும். கணவன் வழி சொந்தங்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மன தெளிவு கிடைக்கும் நாள்.

மகரம்:

புதிய நட்புகளை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். கடன் தொல்லையில் இருந்து விடுபடக்கூடிய காலமாக அமையப் போகிறது. நன்மையான நாள்.

கும்பம்:

மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் வந்து செல்லும். குடும்பத்தில் பெரியவர்களின் பேச்சு கேட்டு நடப்பீர்கள். சேமிப்பில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மீனம்:

கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். உங்களை நம்பி முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US