இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (13.05.2024)
மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாளுக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இன்று கவனமுடன் இருக்க வேண்டிய நாள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
சுப செய்திகள் கிடைக்கும் நாள் இன்றாகும், மனதில் இருந்த கவலைகள் நீங்கும், பணவரவு உண்டு, செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
மிதுனம்
இன்று செலவுகள் அதிகமாகலாம், பணியிடத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கலாம், எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் ஏற்படும்.
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், நல்ல செய்திகள் வந்து சேரும் நாள் இதுவாகும், நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியம் முடிவுக்கு வரும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சிம்மம்
இன்று ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள், பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
ஆடம்பர பொருட்களை வாங்க நேரிடலாம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது, வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, பண வரவு இருக்கும்.
துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், பழைய கடன் வந்து சேரும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
வீண் பிரச்சனைகளை இன்று சந்திக்க நேரிடலாம், கருத்து வேறுபாடுகள் ஏற்படும், தொழிலில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது, உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
தனுசு
இன்று சந்திராஷ்டமம் என்பதால் நிதானம் தேவை, வியாபாரத்தில் பொறுமையை கடைபிடிக்கவும், உடல் ஆரோக்கியத்தில் தொய்வு ஏற்படலாம்.
மகரம்
இன்று மகிழ்ச்சியான செய்தி வந்து சேரலாம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், உறவினர்கள் மூலம் காரியங்கள் கைகூடும், கடன்களை திரும்பக் கொடுக்கலாம்.
கும்பம்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், சுப நிகழ்ச்சிகள் நடக்கும், பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும், பணியிடத்தில் மரியாதை கூடும்.
மீனம்
இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறாமல் போகலாம், மன சங்கடங்கள் ஏற்படலாம், நண்பர்களின் வரவால் மகிழ்ச்சி உண்டாகும்.