நாளைய ராசி பலன்(05-11-2025)
மேஷம்:
புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் ஏற்பட்ட மன குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்வீர்கள்.
ரிஷபம்:
நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவழிப்பீர்கள். சிலருக்கு தங்கம் வெள்ளி வாங்கும் யோகம் உண்டாகும். பெற்றோர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
வீடுகளில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். குலதெய்வம் கோயிலுக்கு செல்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். தந்தை உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்:
உடன் பிறந்தவர்களால் சில சங்கடம் உண்டாகலாம். தாய்மாமன் வழி உறவுகளால் சில ஆதாயம் கிடைக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். முன்னோர்கள் வழிபாடு நன்மை வழங்கும்.
சிம்மம்:
வருமானத்தில் உண்டான தடை விலகும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மதியம் மேல் சிலருக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வரலாம் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.
கன்னி:
இன்று படிப்பிற்காக அலைச்சல் உண்டாகும். உங்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலை விலகும். உங்களை பற்றி புரிந்து கொள்ளும் சூழல் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
துலாம்:
இன்று உங்களுக்கு மனதில் உள்ள பயம் விலகி முன்னேற்றம் பெரும் நாள். தொழில் ரீதியாக நீங்கள் பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலை வரலாம்.
விருச்சிகம்:
இன்று மருத்துவம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சிலருக்கு குடும்பத்தில் சில சிக்கல்கள் வரலாம். மதியம் மேல் குலதெய்வம் கோயில் சென்று வழிபாடு செய்வீர்கள்.
தனுசு:
உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் உங்களை புரிந்து நடந்து கொள்வார். எதையும் சாதிக்கும் நிலை உண்டாகும்.
மகரம்:
இன்று உங்களின் கோபத்தை குறைத்து கொள்வீர்கள். உங்கள் வீடுகளில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நல்ல முறையில் முடியும். உங்களுக்கு சாதகமான நாள்.
கும்பம்:
இன்று புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும். வெளியே செல்லும் பொழுது சற்று கவனமாக இருங்கள். இறைவழிபாடு மேற்கொண்டால் அந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
மீனம்:
குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும். இடப்பிரச்சனை நல்ல முடிவை பெரும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். உண்மை நபர்களை புரிந்து கொள்வீர்கள்,
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |