இன்றைய ராசி பலன்(18.10.2024)
மேஷம்
வியாபாரத்தில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.நிறுவனங்களில் பணி புரிவோர் கவனமாக செயல்பட வேண்டும். பெரிய அளவிலான முதலீடுகள்செய்வதை இன்று தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை முடியாமல் போகலாம்.அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். உறவினரால் மன சங்கடம் ஏற்படும்.நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வரும்.
மிதுனம்
வியாபாரத்தில் கவனமாக செயல் படவேண்டிய நாள்.இன்று எதிலும் கவனமாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
கடகம்
வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும்.தொழில் முன்னேற்றமடையும்.இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர்.சிலருக்கு எதிர்பாராத வெளியூர் பயணம் உண்டாகும்.
சிம்மம்
குடும்பத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக நண்பர்களுடன் ஆலோசனை மேற்கொள்வீர்.
கன்னி
குடும்ப விஷயங்களில் நிதானமாக கையாள்வது நன்மை தரும்.எதிர்பார்ப்பு இழு பறியாகும்.பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி வருவதில் தாமதம் ஏற்படும்.
துலாம்
நினைத்த செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.மனம் பதட்டம் அடையாமல் பார்த்து கொள்வது நன்மை உண்டாக்கும்.ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
விருச்சிகம்
உடல் உபாதைகள் விலகும்.முடியாத வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
தனுசு
அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உறவினர்கள் உதவியுடன் வேலை நடந்தேறும்.லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் மேற்கொள்ளும் வேலை லாபமாகும். புதிய முயற்சி வெற்றியாகும்.
மகரம்
முயற்சிகளை வெற்றியாக்குவார். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகவல் வரும்.ராகுவால் முயற்சி லாபமாகும். சிறு வியாபாரி நிலை முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கும்பம்
நினைத்ததை சாதிப்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும்.
மீனம்
இன்று குடும்பத்துடன் விட்டுக் கொடுத்து செயல்படுவீர்.பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |