இன்றைய ராசிபலன் (13.08.2024)
மேஷம்
இன்று செய்யும் வேலைகளில் திட்டமிட்டு வெற்றி அடைவீர்கள்.நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் சில சங்கடம் தோன்றும்.
ரிஷபம்
இன்றைய நாளில் எதையும் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் ஏற்ற தாழ்வு இருக்கும்.
மிதுனம்
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.பணிபுரியும் இடத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புண்டாகும்.
கடகம்
நீங்கள் எடுக்கும் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும்.ஆதலால் சற்று கவனம் அவசியம். வியாபாரத்தில் திட்டமிட்ட வேலை திட்டமிட்டபடி நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.
சிம்மம்
நீங்கள் எடுக்கும் முயற்சியில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.
கன்னி
வியாபாரத்தில் உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.தொழிலில் ஏற்படும் தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்
இன்றைய சூழலில் எதிலும் நிதானமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய நாள்.குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னைஏற்பட வாய்ப்பு இருப்பதால் அமைதி காப்பது நன்மையில் அமையும்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
தனுசு
வியாபாரத்தில் உள்ள தடைகள் விலகி எதிர்பார்த்த வருமானம் வரும்.இருந்தாலும் மதியம் மீள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத பயணமும் அலைச்சலும் ஏற்படலாம்.
மகரம்
சமுதாயத்தில் உங்கள் பொருளாதார நிலை உயரும்.இருந்தாலும் சில சூழலில் நீண்ட அமைதி காக்க வேண்டிய நாள்.உடல் ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கும்பம்
அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள்.உடன் வேலை செய்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.வருமானத்தில் இருந்த தடை விலகும்.
மீனம்
வேலை செய்யும் இடத்தில் மறைமுகத் தொல்லை உண்டாகும். நட்புகளால் சில மன வருத்தங்களுக்கு ஆளாகலாம்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |