இன்றைய ராசி பலன்(25-04-2025)

Report

மேஷம்:

இன்று குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த வேலையை செய்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு நெருங்கிய நண்பர்களை சந்தித்து கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.

ரிஷபம்:

நீண்ட காலமாக மனதை வருடிய காரியம் உங்களை விட்டு விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுக்கள் வளரும். ஒரு சிலருக்கு வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

மிதுனம்:

இன்று எந்த ஒரு செயலையும் தீர ஆலோசித்து செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் சிக்கல் உண்டாகலாம். மூன்றாம் நபர் பேச்சை கேட்டு எந்த ஒரு செயலிலும் இறங்க வேண்டாம்.

கடகம்:

காலை முதல் உடல் சோர்வாக காணப்படுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். சகோதரன் சகோதரி வழியே நல்ல ஆதரவை பெறுவீர்கள். நன்மையான நாள்.

சிம்மம்:

இயந்திர பணியில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வம்பு வழக்குகளில் சிக்க வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல்பட்டால் வருவதை சமாளித்து கொள்ளலாம்.

சக்தி வாய்ந்த சித்திரை அமாவாசை அன்று சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள்

சக்தி வாய்ந்த சித்திரை அமாவாசை அன்று சொல்ல வேண்டிய 5 மந்திரங்கள்

கன்னி:

நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

துலாம்:

மனதில் தேவை இல்லாத பயம் உண்டாகும். சிலருக்கு குடும்பங்களில் சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இறைவழிபாடு மிக சிறந்த பலன் கொடுக்கும்.

விருச்சிகம்:

தடைகளைத் தாண்டி உங்கள் வேலைகளை முடித்துக் காட்டுவீர். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். நீங்கள் எண்ணியதை இன்று அடைவீர். கோயில் வழிபாட்டில் மனம் செல்லும்.

தனுசு:

இன்று அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தினால் வெற்றி கிடைக்கும். தேவை இல்லாத மன கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதானம் அவசியம்.

மகரம்:

திட்டமிட்டு செயல்பட்டு வியாபாரத்தில் லாபமடைவீர். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்.

கும்பம்: 

உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வெளியூர் பயணம் லாபமாகும்.

மீனம்:

வங்கி தொடர்பான வேலையில் சில சங்கடங்களை சந்திக்கலாம். எதையும் யோசித்து பொறுமையாக செய்தால் நன்மை உண்டாகும். மனைவி வழி சொந்தம் வருகையால் சந்தோசம் உண்டாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US